உக்ரைனில் ரஷ்ய துருப்புக்களை எதிர்த்து சண்டையிடும் இஸ்ரேலியர்கள்! வெளியுறவுத்துறை தகவல்
உக்ரைனில் ரஷ்யாவுக்கு எதிராக இஸ்ரேலிய கூலிப்படையினர் சண்டையிடுவதாக ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஹிட்லர் யூத இரத்தம் என ரஷ்யா கூறியதை அடுத்து வெளியுறவுத்துறை அமைச்சகம் இவ்வாறு தெரிவித்துள்ளது.
உக்ரைனில் அசோவ் போராளிகளுடன் தோளோடு தோள் சேர்ந்து ரஷ்யாவுக்கு எதிராக சண்டையிடுவதாக ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சக்கத்தின் செய்தித்தொடர்பாளர் மரியா ஜகரோவா தெரிவித்துள்ளார்.
அசோவ் படைப்பிரிவு ஒரு தீவிர வலதுசாரி, அனைத்து தன்னார்வ காலாட்படை இராணுவப் பிரிவாகும், அதன் உறுப்பினர்கள் பெரும்பாலும் நியோ-நாசி சித்தாந்தத்தை கொண்டிருப்பதாக குற்றம் சாட்டப்படுகிறார்கள்.
ஏவுகணை தாக்கியதில் கொளுந்துவிட்டு எரியும் உக்ரைன் எண்ணெய் கிடங்கு! வெளியான பரபரப்பு வீடியோக்கள்
2014 ஆம் ஆண்டில், கிழக்கு டான்பாஸ் பிராந்தியத்தில் ரஷ்ய சார்பு பிரிவினைவாதிகளுக்கு எதிராக அசோவ் படைப்பிரிவு ஆயுதம் ஏந்தியது.
பிப்ரவரி பிற்பகுதியில் படையெடுப்பு தொடங்கப்பட்டதில் இருந்து அது உக்ரேனிய பாதுகாப்புப் படைகளுடன் இணைந்து ரஷ்ய துருப்புக்களை எதிர்த்துப் போராடி வருவது குறிப்பிடத்தக்கது.