நியூயார்க் யூதர்களே உடனே வெளியேறுக... கொந்தளித்த இஸ்ரேல் அமைச்சர்
நியூயார்க் நகரின் மேயராக தெரிவாகியுள்ள ஜோஹ்ரான் மம்தானியை ஹமாஸ் ஆதரவாளர் என விமர்சித்துள்ளார் இஸ்ரேலின் புலம்பெயர்ந்தோர் அமைச்சர்.
ஹமாஸ் ஆதரவாளரிடம்
நியூயார்க் நகரத்தில் வசிக்கும் யூத மக்கள் இனி தாமதிக்காமல் இஸ்ரேல் திரும்ப வேண்டும் என்றும் அமைச்சர் அமிச்சாய் சிக்லி சமூக ஊடகத்தில் அழைப்பு விடுத்துள்ளார்.

நியூயார்க் நகரம் ஒரு காலத்தில் உலகளாவிய சுதந்திரத்தின் அடையாளமாக விளங்கியது, ஆனால் தற்போது அதன் சாவியை ஹமாஸ் ஆதரவாளரிடம் ஒப்படைத்து விட்டார்கள் என்றும் அவர் பதிவு செய்துள்ளார்.
25 வருடங்களுக்கு முன்னர் நியூயார்க் மக்களில் மூவாயிரம் பேரைக் கொன்ற இஸ்லாமியப் பயங்கரவாதிகளுக்கும் ஜோஹ்ரான் மம்தானிக்கும் கருத்து ஒற்றுமை இருப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
கடந்த 2001 செப்டம்பர் 11ம் திகதி நியூயார்க் மற்றும் வாஷிங்டன் மீது அல்-கொய்தா நடத்திய தாக்குதல்களையே அமிச்சாய் சிக்லி குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், எதிர்வரும் ஜனவரி மாதம் நியூயார்க் நகரின் மேயராக பொறுப்புக்கு வரும் மம்தானி, நியூயார்க் நகரம் புலம்பெயர் மக்களுக்கான புகலிடமாக நீடிக்கும் என்றே குறிப்பிட்டுள்ளார்.

நிறவெறி தேசம்
மட்டுமின்றி, சமீபத்திய மாதங்களில், யூத எதிர்ப்புவாதத்தையும், அவர் அனுபவித்த இஸ்லாமிய வெறுப்பையும் கடுமையாக குரல் கொடுத்துக் கண்டித்துள்ளார்.
அத்துடன் நீண்ட காலமாக பாலஸ்தீன ஆதரவாளராகவும் இருந்து வருகிறார். இஸ்ரேலை நிறவெறி தேசம் என குறிப்பிட்டுள்ள மம்தானி, காஸாவில் இஸ்ரேல் முன்னெடுக்கும் போரை இன அழிப்பு என்றும் அடையாளப்படுத்தியுள்ளார்.

ஆனால், நியூயார்க் கண்டிப்பாக மாறப் போகிறது, குறிப்பாக இனி யூத சமூகத்திற்கு உகந்ததாக இருக்காது என்றும் அமிச்சாய் சிக்லி பதிவு செய்துள்ளார்.
யூதர்கள் முடிவெடுக்க வேண்டிய தருணம் இதுவென குறிப்பிட்டுள்ள அமிச்சாய் சிக்லி, இஸ்ரேலுக்கு அவர்கள் திரும்ப வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |