ராணுவ வீரரை லொறி ஏற்றிக் கொன்றுவிட்டு தப்பிச் சென்ற பாலஸ்தீன சாரதியை சுட்டுக் கொன்ற இஸ்ரேல்
இஸ்ரேல் ராணுவ வீரரை லொறி ஏற்றி கொன்றதாக கூறி பாலஸ்தீனிய சாரதி ஒருவர் இஸ்ரேலிய ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
இஸ்ரேல் ராணுவ வீரர் கொலை
இஸ்ரேல் ராணுவ வீரரை பீட் சிரா என்ற பாலஸ்தீன சாரதி ஒருவர் இஸ்ரேலுக்கும் வெஸ்ட் பேங்க் பகுதிக்கும் இடைப்பட்ட பகுதியில் அமைந்துள்ள மக்காபிம் சோதனை சாவடியில் லொறி ஏற்றி கொன்று விட்டு தப்பிச் சென்றார்.
வியாழக்கிழமை நடைபெற்ற இந்த சம்பவத்தில் மேலும் இரண்டு பேர் காயமடைந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Ammar Awad/Reuters
இதற்கிடையில் இராணுவ வீரரை லொறி ஏற்றிக் கொண்டு விட்டு நிற்காமல் சென்ற பாலஸ்தீன சாரதியை 6 கிலோ மீட்டர் தூரத்திற்குள் துரத்தி பிடித்து இஸ்ரேல் ராணுவம் மடக்கி சுட்டுக் கொன்றுள்ளது.
இஸ்ரேல் ராணுவத்தின் இந்த உடனடியான அதிரடி நடவடிக்கைக்கு அந்த நாட்டின் பாதுகாப்பு துறை அமைச்சர் Yoav Gallant பாராட்டு தெரிவித்துள்ளார், அத்துடன் உயிரிழந்த இஸ்ரேல் ராணுவ வீரரின் குடும்பத்தினருக்கு ஆறுதலும் தெரிவித்துள்ளார்.
Ammar Awad/Reuters
இஸ்ரேல் பொலிஸார் தகவல் படி, பாலஸ்தீன சாரதி இஸ்ரேலில் வேலை பார்க்க பெர்மிட் வைத்து இருந்தார் என்பது தெரியவந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |