காசாவின் பழமையான தேவாலயம் மீது இஸ்ரேல் தாக்குதல்: மக்கள் பலர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் குற்றச்சாட்டு
பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த தேவாலயத்தின் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதலை நிகழ்த்தியதில் பலர் உயிரிழந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
காசா மீது தாக்குதல்
இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினரின் திடீர் தாக்குதலுக்கு பிறகு இஸ்ரேலின் முக்கிய தாக்குதல் குறியாக பாலஸ்தீனத்தின் காசா நகரம் அமைந்துள்ளது.
காசா நகரில் தான் அதிகமான முஸ்லிம்கள் வசிக்கும் காரணத்தால் இஸ்ரேல் ராணுவம் காசா மீது இடைவிடாத தாக்குதலை முன்னெடுத்து வருகிறது.
AFP
இந்த இடைவிடாத தாக்குதலால் அங்குள்ள பெண்கள், குழந்தைகள் என பொதுமக்கள் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
தேவாலயத்தின் மீது தாக்குதல்
இஸ்ரேலின் ஏவுகணை தாக்குதலில் இருந்து தப்பிப்பதற்காக காசா நகர மக்கள் அங்குள்ள கிரேக்க ஆர்த்தடாக்ஸ் தேவாலயத்தின் (Greek Orthodox church) வளாகத்திற்கு இடம்பெயர்ந்துள்ளனர்.
இந்நிலையில் இந்த தேவாலயத்தை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த தாக்குதலில் இடம்பெயர்ந்த பல மக்கள் கொல்லப்பட்டு இருப்பதாக ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
AP
சர்வதேச ஊடகங்களின் தகவல் படி, காசா மக்கள் தஞ்சம் அடைந்து இருந்த மசூதியை சுற்றி இருந்த இடங்களை குறி வைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது என தெரிவித்துள்ளது.
ஆனால் இந்த ஏவுகணை தாக்குதல் குறித்து இதுவரை இஸ்ரேல் எந்தவொரு தகவலும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |