11 நாட்கள் நீண்ட போர்... பாலஸ்தீனம்- இஸ்ரேல் நாடுகளில் யாருக்கு அதிக பொருளாதார இழப்பு?
இஸ்ரேல்- பாலஸ்தீனம் நாடுகளுக்கு இடையே தீவிரமாக முன்னெடுக்கப்பட்ட 11 நாள் நீண்ட போரில் பொருளாதார ரீதியாக இஸ்ரேல் பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டதாக தெரிய வந்துள்ளது.
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் நாடுகளுக்கு இடையேயான 11 நாட்கள் நீடித்த போர் கடந்த வெள்ளிக்கிழமை முடிவுக்கு வந்தது.
இதில் காசா பகுதியில், சுகாதாரம் மற்றும் மருத்துவ வசதிகளும் உள்கட்டமைப்பும் சேதமடைந்துள்ள நிலையில் இஸ்ரேல் பொருளாதார வளர்ச்சியில் பின்னடைவை சந்தித்துள்ளது.
காசா பகுதியில் இந்த 11 நாட்களில் மட்டும் 16,800 குடியிருப்பு பகுதிகள் மொத்தமாக சேதமடைந்துள்ளதாக குறிப்பிட்ட அமைச்சரகம் தெரிவித்துள்ளது. இதில் 1,800 குடியிருப்புகள் இனி குடியிருக்க முடியாதவை எனவும் 1,000 குடியிருப்புகள் மொத்தமாக தரைமட்டமாக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.
இந்த 11 நாட்கள் நீடித்த போருக்கு முன்னர் காசா பகுதியில் 12 மணி நேரம் மின்சாரம் வழங்கப்பட்டு வந்துள்ளது. தற்போது 3-4 மணி நேரம் மட்டுமே மின்சாரம் வழங்கப்படுகிறது.
இஸ்ரேல் குண்டுவீச்சால் தொழிற்கூடங்கள் மற்றும் அதன் தொடர்புடைய இழப்பு மட்டும் 40 மில்லியன் டொலர் என கணக்கிடப்பட்டுள்ளது. எரிசக்தி துறையில் சுமார் 22 மில்லியன் டொலர் சேதாம் ஏற்பட்டுள்ளது.
மட்டுமின்றி விவசாய நிலங்கள், கிடங்குகள் என ஏற்பட்ட சேதம் மட்டும் 27 மில்லியன் டொலர் என கூறப்படுகிறது.
கொரோனா பாதிப்பால் முதல் காலாண்டில் மட்டுமே இஸ்ரேலின் பொருளாதாரம் 6.5% சரிவை எதிர்கொண்ட நிலையில், தற்போது 11 நாட்கள் போரையும் சந்தித்துள்ளனர்.
ஏற்கனவே, சுகாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் பொருளாதாரம் இரு நாடுகளுக்கும் இடையேயான போரால் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என பொருளாதார நிபுணர்கள் இஸ்ரேலை எச்சரித்திருந்தனர்.
மே 13ல் இஸ்ரேலின் உற்பத்தியாளர்கள் சங்கம் வெளியிட்ட தகவலில், மே 11-13 வரையான நாட்களில் 166 மில்லியன் டொலர் இழப்பை சந்தித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும், இஸ்ரேலில் தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், தொழில் துறை கடும் சிக்கலில் உள்ளது.
இது இவ்வாறிருக்க, காசா முனையில் இருந்து முன்னெடுக்கப்பட்ட தாக்குதலால் ஏற்பட்ட மொத்த பாதிப்பு தொடர்பில் முழு தரவுகளும் திரட்டப்படவில்லை என்றே முக்கிய அமைச்சகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.