ககன்யான் திட்டத்திற்கான முக்கிய பரிசோதனையில் ISRO வெற்றி
ககன்யான் திட்டத்திற்கான முக்கிய பரிசோதனையொன்றில் ISRO வெற்றி பெற்றுள்ளது.
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (ISRO) தனது ககன்யான் (Gaganyaan) திட்டத்தின் கீழ் மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் முயற்சியில், ஒரு முக்கியமான பரிசோதனையை வெற்றிகரமாக முடித்துள்ளது.
இது Intergrated Air Drop Test (IADT-01) எனப்படும் பரிசோதனையாகும்.
இதில் ககன்யான் திட்டத்திற்கான Crew Module ஹெலிகாப்டரில் இருந்து போடப்பட்டு, அதன் பாராசூட் அமைப்புகள் செயல்பாடுகள் சோதிக்கப்பட்டன.
இந்த பரிசோதனை ISRO, DRDO, இந்திய விமானப்படை, கடற்படை மற்றும் கரையோர பாதுகாப்பது படை ஆகியவற்றின் கூட்டு செயல்பாடாக நடைபெற்றது.
பரிசோதனைக்கான Module 2023 அக்டோபரில் KCP - Heavy Engineering Unit மூலம் ISRO-விற்கு வழங்கப்பட்டது.
இந்த மொட்யூலில் 10 பாராசூட்கள் இணைக்கப்பட்டு விண்வெளியில் இருந்து பூமிக்கு திரும்பும்போது வேகத்தை குறைத்து, மென்மையான கடலில் இறங்குவதை உறுதி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த சோதனையில் பாராசூட் அமைப்புகள் எதிர்பார்த்தபடி செயல்பட்டன. இது ககன்யான் திட்டத்தின்முன்னேற்றத்தில் ஒரு முக்கிய கட்டமாகும்.
மேலும் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் இந்தியாவின் முயற்சிக்கு உறுதியான அடித்தளத்தை அமைக்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
ISRO Gaganyaan test, Gaganyaan crew module drop, ISRO parachute test 2025, Gaganyaan IADT success, ISRO space mission India, Gaganyaan ocean landing, Indian space program update, ISRO DRDO Air Force Navy, Sriharikota crew capsule test, Gaganyaan parachute system