எல்லா துறைகளிலும் இருக்கு.., சினிமா மீது மட்டும் ஏன் பழி போடுறீங்க? குஷ்பு ஆவேசம்
எல்லா இடங்களிலும் இந்த பிரச்சினை நடப்பது உங்களுக்கு தெரியும் என்று வன்புணர்வு கொடுமை தொடர்பாக குஷ்பு பேசியுள்ளார்.
ஹேமா கமிட்டி அறிக்கையால் கேரள சினிமாவில் பல்வேறு பரபரப்பான விடயங்கள் நடந்துள்ளன. இந்த அறிக்கையில், கேரள நடிகைகளுக்கு ஏற்பட்டுள்ள வன்புணர்வு கொடுமைகள் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இந்த வன்புணர்வு கொடுமைகள் கேரள சினிமாவில் மட்டுமல்ல, தமிழ் சினிமாவிலும் நடைபெற்றுள்ளது என்று தமிழ் நடிகைகளும் குற்றம் சாட்டியுள்ளனர்.
திரைப்பட டிக்கெட்டை 2000-க்கு விற்கிறவர்களா நாட்டை காப்பாற்ற போகிறார்கள்? விஜயை மறைமுகமாக விமர்சித்த அமைச்சர்
குஷ்பு பேசியது
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பெண் உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கத்தில் கடந்த 2019 -ம் ஆண்டில் SAM-GSICC கமிட்டி சங்கத்தின் சார்பில் பாதுகாப்பு கமிட்டி ஆலோசனைக் கூட்டம் உருவாக்கப்பட்டது.
இந்த கமிட்டியின் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர், துணைத் தலைவர் பூச்சி எஸ். முருகன், பொருளாளர் கார்த்தி மற்றும் கமிட்டி தலைவர் ரோகிணி, சுஹாசினி, குஷ்பூ, லலிதா குமாரி, கோவை சரளா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தின் முடிவில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
வன்புணர்வு பாதிக்கப்பட்டவர்களின் புகாரின் அடிப்படையில் உண்மை இருக்கும் பட்சத்தில் அவர்கள் ஐந்து ஆண்டுகள் திரைத் துறையில் பணியாற்ற தடை விதிக்க தயாரிப்பாளர் சங்கத்துக்கு பரிந்துரைக்கப்படுகிறது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நடிகை குஷ்பு, "எல்லா துறைகளிலும் வன்புணர்வு கொடுமை நடக்கிறது. ஏன் சினிமா துறை மீது மட்டும் பழி போடுகிறீர்கள்? அதை மட்டும் பேச மறுக்குறீர்கள்?
மருத்துவம், கல்வித்துறை, அரசியல், ஐடி என்று பல துறைகளில் நடக்கவில்லையா? எல்லா இடங்களிலும் இந்த பிரச்சினை நடப்பது உங்களுக்கு தெரியும்.
அனைத்து துறைகளிலும் கமிட்டி இருக்கிறது என்று சொன்னால் ஒப்புக் கொள்கிறேன். வன்புணர்வுக்கு நான் ஆளாகவில்லை" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |