திரைப்பட டிக்கெட்டை 2000-க்கு விற்கிறவர்களா நாட்டை காப்பாற்ற போகிறார்கள்? விஜயை மறைமுகமாக விமர்சித்த அமைச்சர்
நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்னும் கட்சியை தொடங்கி அரசியலுக்கு நுழைந்த நிலையில் தமிழக அமைச்சர் தாமோ அன்பரசன் மறைமுகமாக விமர்சனம் செய்துள்ளார்.
நடிகர் விஜய் தமிழக வெற்றி கழக கட்சியை தொடங்கி தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். அவர் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார்.
அவர் மக்களுக்கு பல நலத்திட்ட உதவிகளை செய்தும், மாணவ மாணவியருக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கி சிறப்பித்தும் வருகிறார்.
ஒரு மாநில மாநாடு, 4 மண்டல மாநாடு, மாவட்ட பொதுக் கூட்டங்களை நடிகர் விஜய் நடத்தவுள்ளதாக தெரிகிறது. அதன்படி விக்கிரவாண்டியில் மாநாடு நடத்த அனுமதி கோரி அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பொலிஸில் மனு அளித்துள்ளார்.
அமைச்சர் பேசியது
இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தமிழக அமைச்சர் தாமோ அன்பரசன், "ஒரு திரைப்படத்திற்கு ரூ.200 முதல் ரூ.250 கோடி வரை வாங்குகிறார்கள்.
அவர்களின் திரைப்படம் வெளிவரும் போது டிக்கெட்டுகளை இலவசமாக ரசிகர்களுக்கு வழங்க வேண்டும். ஆனால், ஒரு டிக்கெட்டை 2 ஆயிரத்திற்கு விற்கிறார்கள். இவர்களால், நாட்டை பாதுகாக்க முடியுமா?
கடந்த ஒரு வருடத்தில் இருந்து தான் நடிகர் விஜய் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு பரிசு கொடுத்து வருகிறார். ஆனால், நாம் கடந்த 15 வருடமாக கொடுத்து வருகிறோம்.
கட்சி ஆரம்பிப்பதை முன்கூட்டியே தெரிந்ததால் தான் அவர் அப்படி செய்துள்ளார்" என்று விஜயை மறைமுகமாக விமர்சித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |