உக்ரைனுக்கு ஆதரவாக களமிறங்கிய நபர்களுக்கு நெருக்கடி: உலகநாடுகளின் நிலைப்பாடு என்ன?
ரஷ்யா நடத்திவரும் போரில் உக்ரைனுக்கு ஆதரவாக பல்வேறு நாடுகளை சேர்ந்த தன்னார்வ போராளிகள் களமிறங்கி இருப்பது ரஷ்யாவிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவர்களை கூலிப்படையினர் என ரஷ்ய குற்றம் சாட்டியுள்ளது.
கடந்த மாதம் 24ம் திகதி உக்ரைன் மீது ரஷ்யா தனது போரை தொடங்கி தொடர் தாக்குதலை நடத்திவரும் நிலையில், உக்ரைனுக்கு ஆதரவாக களமிறங்கி போராடி வரும் பிறநாடுகளை சார்ந்த தன்னார்வ போராளிகளுக்கு அவர்களின் சொந்த நாடுகளில் சட்டபூர்வமான விளைவுகளை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தன்னார்வ தொண்டர்களுக்கு தடை விதிக்கும் நாடுகள்:
பிரித்தானியா:
1870ம் ஆண்டு கடைசியாக புதிப்பிக்கப்பட்ட பிரித்தானியாவின் வெளியுறவு சேர்க்கை சட்டத்தின் படி பிரித்தானியாவுடன் சமாதானமாக இருந்து சண்டையிடும் வெளிநாட்டு ராணுவங்களுடன் அவர்களது குடிமக்கள் இணைவதை தடை செய்கிறது.
மேலும் கடந்த புதன்கிழமை புதிப்பிக்கப்பட்ட பிரித்தானியாவின் வெளியுறவு கொள்கையின் பயண ஆலோசனையின் படி, ரஷ்யாவிற்கு எதிராக உக்ரைன் ராணுவத்தில் இணையும் பிரித்தானியர்களுக்கு அபராதம் விதிக்கப்படலாம் என தெரிவித்தது உள்ளது.
முதலில் தன்னார்வலர்களாக உக்ரைன் ஆதரவாக களமிறங்கும் பிரித்தானியர்களை நாங்கள் தடுக்க மாட்டோம் என்ன பிரித்தானிய வெளியுறவுத்துறை செயலர் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
அவுஸ்ரேலியா:
உக்ரைன் ரஷ்யா இடையே நடைபெறும் போரில் அவுஸ்ரேலியா குடிமக்கள் தன்னார்வலர்களாக பங்கேற்பதை தடை விதிப்பதாக அந்த நாட்டின் பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்தார் மேலும் விதியை மீறி செல்லும் குடிமக்கள் மீது சட்டபூர்வமான நடவடிக்கை மேற்கொள்ள படும் எனவும் எச்சரித்துள்ளார்.
இந்தியா:
உக்ரைனில் அந்த நாட்டிற்கு ஆதரவாக ஆயுதம் ஏந்திய இந்தியர்களின் மீது இந்தியாவின் சட்ட பூர்வ நடவடிக்கை குறித்து கேள்வி எழுப்பப்பட்டதற்கு சரியான பதிலளிக்கவில்லை.
ஆனால் கடந்த 2014ல் நடைபெற்ற ஈராக் போரில் கலந்து கொண்ட இந்தியர்கள் மீது தொடரப்பட்ட வழக்கில் இந்தியர்களை வேறொரு நாட்டின் மோதலில் பங்கேற்க அனுமதிப்பது "இந்திய அரசு மற்ற நாடுகளில் பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதாகக் குற்றச்சாட்டுக்கு வழிவகுக்கும்" என தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா:
அமெரிக்கா வேறொரு நாட்டில் ராணுவத்தில் பணியாற்றுவதற்கு தடை இல்லை என்று வெளியுறவுத்துறை இணையதளம் கூறுகிறது.
ஆனால் 1794ஆம் ஆண்டு அமெரிக்காவில் இயற்றப்பட்ட தனி சட்டமான நடுநிலைமை சட்டம் அமெரிக்காவுடன் சமாதானமாக இருக்கும் நாடுகளுக்கிடையிலான போரில் வெளிநாட்டு ராணுவங்களுக்கு ஆதரவாக அமெரிக்கா குடிமக்கள் பங்கேற்பது தடை விதிக்கப்படுகிறது என தெரிவித்துள்ளது.
ஆனால் அது நவீனகால வரலாற்றில் அரிதாகவே இந்த சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக அமெரிக்கப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் டேவிட் மாலெட் தெரிவித்துள்ளார்.
தன்னார்வ தொண்டர்களுக்கு அனுமதி வழங்கிய நாடுகள்:
ஜேர்மனி:
உக்ரைன் ரஷ்யா போரில் தன்னார்வலர்களாக சேரும் குடிமக்கள் மீது எந்தவொரு சட்டப்பூர்வ நடவடிக்கையும் எடுக்க போவது இல்லை என ஜேர்மனி தெரிவித்துள்ளது.
கனடா:
போரில் கலந்து கொள்வது அவர்களது தனிப்பட்ட முடிவு அதனை தடுக்கப்போவது இல்லை என கனடாவின் பாதுகாப்புத்துறை அமைச்சர் அனிதா ஆனந்த் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் நிலைப்பாடு:
உக்ரைன் போரில் அந்த நாட்டிற்கு ஆதரவாக களமிறங்கியுள்ள வெளிநாட்டினர்களை போராளிகள் என கருத முடியாது, அவர்களை கூலிப்படையினர் எனவே கருதப்படும் என தெரிவித்துள்ளது.
போரை உடனடியாக நிறுத்துங்கள்: ரஷ்யாவின் நிலக்கரி மன்னன் எச்சரிக்கை!