ஈரான் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட இத்தாலிய பெண் பத்திரிகையாளர்: நன்றி தெரிவித்த மெலோனி
ஈரான் சிறையில் இருந்து இத்தாலிய பத்திரிகையாளர் சிசிலியா சாலா(Cecilia Sala) விடுவிக்கப்பட்டுள்ளார்.
இத்தாலிய பத்திரிகையாளர் விடுவிப்பு
இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியின்(Giorgia Meloni) அலுவலகம் புதன்கிழமை வெளியிட்ட தகவலில், ஈரானில் கைது செய்யப்பட்ட இத்தாலிய பத்திரிகையாளர் சிசிலியா சாலா(Cecilia Sala) விடுவிக்கப்பட்டு இத்தாலி திரும்பவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகுந்த பத்திரிகை விசாவில் ஈரான் தலைநகர் தெஹ்ரானில் பணியாற்றி வந்த 29 வயது சாலா, டிசம்பர் 19ம் திகதி கைது செய்யப்பட்டு, கடுமையான சிறைச்சாலை என அறியப்பட்ட எவின் சிறையின்(Evin prison) தனிச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
Ho la fotografia più bella della mia vita, il
— Cecilia Sala (@ceciliasala) January 9, 2025
cuore pieno di gratitudine, in testa quelli che alzando lo sguardo non possono ancora vedere il cielo. Non ho mai pensato, in questi 21 giorni, che sarei stata a casa oggi. Grazie pic.twitter.com/wD2T4Ut3Vo
அமெரிக்காவின் கைதாணையின் பேரில் மிலான் நகரில் ஈரானிய தொழிலதிபர் முகமது அபேதினி(Mohammad Abedini) கைது செய்யப்பட்ட மூன்று நாட்களுக்குப் பிறகு சாலா கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
2024 ஆம் ஆண்டில் ஜோர்டானில் மூன்று அமெரிக்க ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட தாக கூறப்படும் ட்ரோன் பாகங்களை முகமது அபேதினி வழங்கியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டு கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்த தாக்குதலில் ஈரானுக்கு தொடர்பு இல்லை என அந்நாடு மறுப்பு தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் நன்றி
சாலாவின் விடுதலையானது "தீவிரமான தூதரக மற்றும் உளவுத்துறை முயற்சிகளின்" விளைவாகும் என இத்தாலிய அரசாங்க அறிக்கை கூறியுள்ளது.
சிசிலியா சாலாவின் வருகையை சாத்தியமாக்க உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்" என்று பிரதமர் மெலோனி சமூக ஊடகங்களில் தெரிவித்தார்.
Cecilia Sala accolta a Ciampino dall'abbraccio dei suoi cari. #ANSA pic.twitter.com/WBVhSBtC0a
— Agenzia ANSA (@Agenzia_Ansa) January 8, 2025
இன்று பிற்பகுதியில் அவர் ரோமில் தரையிறங்கும் போது அவரை பிரதமர் நேரில் வரவேற்றார்.
சிசிலியா சாலா Il Foglio செய்தித்தாள் மற்றும் Chora Media பாட்காஸ்ட் நிறுவனத்திற்காக பணியாற்றினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |