காபூலிருந்து மக்களுடன் புறப்பட்ட விமானம் மீது துப்பாக்கிச் சூடு! உள்ளிருந்தவர்களின் நிலை என்ன? வெளியான முக்கிய தகவல்
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலிருந்து புறப்பட்ட இத்தாலி மீட்பு விமானம் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக இத்தாலி பாதுகாப்புத்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஆகஸ்ட் 31ம் தேதியோடு ஆப்கானிஸ்தானிலிருந்து வெளிநாட்டு படைகள் வெளியேற வேண்டும் என தலிபான்கள் எச்சரித்துள்ள நிலையில், மக்களை வெளியேற்றும் பணிகளில் அமெரிக்க, பிரித்தானியா உட்பட வெளிநாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
அதேசமயம், காபூல் விமான நிலையத்தில் தாக்குதல் நடத்த ஆப்கானில் உள்ள ஐ.எஸ் தீவிரவாதிகள் திட்மிட்டுள்ளதாக ‘மிகவும் நம்பகமான’ உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது என்று பிரித்தானியா ஆயுதப்படை அமைச்சர் ஜேம்ஸ் ஹெப்பி எச்சரித்துள்ளார்.
இந்நிலையில், இன்று வியாழக்கிழமை காபூல் விமான நிலையத்தில் இருந்து இத்தாலிய இராணுவ போக்குவரத்து விமானம் புறப்பட்ட போது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக இத்தாலியின் பாதுகாப்பு அமைச்சக வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது.
இதில் விமானம் சேதமடையவில்லை என்று அந்த வட்டாரம் தெரிவித்துள்ளது.
கிட்டத்தட்ட 100 ஆப்கானியர்களுடன் காபூலில் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் இத்தாலி விமானத்தை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது என விமானத்தில் பயணித்த இத்தாலிய பத்திரிகையாளர் தகவல் தெரிவித்துள்ளார்.