ட்ரம்ப் செய்வது தவறு... துணிச்சலாக குரல் கொடுக்கும் பெண் தலைவர்
கிரீன்லாந்தை கைப்பற்றும் ட்ரம்பின் திட்டத்தை எதிர்க்கும் நாடுகள் மீது வரிகள் விதிக்கப்போவதாக மிரட்டியுள்ளார் அவர்.
இந்நிலையில், அவர் செய்வது தவறு என துணிச்சலாக குரல் கொடுத்துள்ளார் பெண் தலைவர் ஒருவர்!
மிரட்டும் ட்ரம்ப்
ரஷ்யா உக்ரைனை ஊடுருவியது தவறு என்று ஒருபக்கம் சொல்லிக்கொண்டே, மறுபக்கம் கிரீன்லாந்தை கைப்பற்ற திட்டமிட்டுவருகிறார் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்.

அதற்கு பல நாடுகள் எதிர்ப்பு தெரிவிக்க, சில நாடுகள் மீது வரிகள் விதித்துள்ளதுடன், மேலும் பல நாடுகள் மீது வரி விதிக்கப்போவதாக மிரட்டியும் உள்ளார் ட்ரம்ப்.
துணிச்சலாக குரல் கொடுக்கும் பெண் தலைவர்
இந்நிலையில், ட்ரம்ப் செய்வது தவறு என துணிச்சலாக குரல் கொடுத்துள்ளார் பெண் தலைவர் ஒருவர்.
ஆம், எப்போதுமே, இனிமையானவர், மென்மையானவர், ரொமாண்டிக்காக பழகுபர் என ஊடகங்களால் காட்டப்படும் இத்தாலி பிரதமரான ஜியார்ஜியா மெலோனிதான், ட்ரம்ப் மீது வெளிப்படையான, துணிச்சலான விமர்சனம் முன்வைத்துள்ளார்.

கிரீன்லாந்தைக் கைப்பற்ற நினைக்கும் தனது திட்டத்தை எதிர்ப்பவர்கள் மீது வரிகள் விதிக்கப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மிரட்டுவது தவறு என்று கூறியுள்ளார் மெலோனி.
நான் இந்த விடயம் குறித்து என்ன நினைக்கிறேன் என்பதை ட்ரம்பிடம் கூறியுள்ளேன். அத்துடன், நேட்டோ செகரட்டரி ஜெனரலுடனும் இது குறித்து பேசியுள்ளேன்.
இந்த பிரச்சினை குறித்து நடவடிக்கை எடுக்கப்போவதாக அவர் தெரிவித்துள்ளார் என்றும் கூறியுள்ளார் மெலோனி.
அதே நேரத்தில், இது கிரீன்லாந்து தொடர்பில் ஐரோப்பாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான, புரிந்துகொள்ளுதல் மற்றும் தொடர்புகொள்ளுதல் காரணமாக ஏற்பட்டுள்ள பிரச்சினை என்றும், இந்த பிரச்சினையை தீர்ப்பதில் முக்கிய பங்குவகிப்பதை நேட்டோ அமைப்புதான் முடிவு செய்யவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார் மெலோனி.
இத்தாலி, ஐரோப்பாவில், அமெரிக்காவின் கூட்டாளர் நாடு என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |