2025-ல் 1.65 லட்சம் வேலை விசாக்கள் வழங்கவுள்ள பிரபல ஐரோப்பிய நாடு!
2025-ல் 1.65 லட்சம் வேலை விசாக்களை வழங்க ஐரோப்பிய நாடொன்று திட்டமிட்டுள்ளது.
இத்தாலி தனது 2025 வேலை விசா திட்டத்தின் கீழ் 1,65,000 வேலை விசாக்களை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது.
கூடுதலாக 10,000 விசாக்கள் பராமரிப்பு பணியாளர்களுக்காக (caregivers) ஒதுக்கப்பட்டுள்ளது.
இத்தாலியின் Decreto Flussi திட்டத்தின் கீழ், வேலை விசாக்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுகிறது.
மேலும், இந்த விசா முறைமையை எளிதாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பணியாளர்களுக்கான அதிக வாய்ப்புகள்
இத்தாலியில் தொழிலாளர் பற்றாக்குறை, முதியோர் அதிகரிப்பு, குறைந்த பிறப்பு விகிதம் போன்ற காரணங்களால் அதிகரித்துள்ளது.
இதை சமாளிக்க, பல துறைகளுக்கு வெளிநாட்டிலிருந்து தொழிலாளர்களை ஈர்ப்பதே இத்தாலி அரசின் நோக்கமாகும்.
தொழிலாளர் தேவை அதிகரித்துள்ள முக்கிய துறைகள்:
- மருத்துவம்: செவிலியர்கள், மருத்துவ உதவியாளர்கள்
- கட்டிடக்கலை: தொழிலாளர்கள், பொறியாளர்கள்
- விருந்தோம்பல் துறை: உணவக பணியாளர்கள், சமையலர்கள், ஹோட்டல் ஊழியர்கள்
- தகவல் தொழில்நுட்பம்: மென்பொருள் மற்றும் தொலைத்தொடர்பு நிபுணர்கள்
- பயிர் உற்பத்தி மற்றும் மீன்பிடி தொழில்
வேலை விசா வகைகள் மற்றும் தேவைப்படும் ஆவணங்கள்
1. Non-seasonal work visa (Decreto Flussi – Skilled Work Visa)
- ஒரு இத்தாலிய நிறுவனத்திலிருந்து வேலை வாய்ப்பு பெற்றிருக்க வேண்டும்
- நுல்லா ஓஸ்டா (Nulla Osta) வேலை அனுமதி பெற்றிருக்க வேண்டும்
- தங்குமிடம், மருத்துவ காப்பீடு, வேலை அனுபவம்/தகுதிகள் போன்ற ஆவணங்கள் தேவை
2. சீசனல் வேலை விசா (Seasonal Work Visa)
- விவசாயம், சுற்றுலா, மற்றும் விருந்தோம்பல் துறைகளுக்கு விண்ணப்பிக்கலாம்
- வேலை காலம் 9 மாதங்கள் வரை இருக்கும்
3. பராமரிப்பு பணியாளர் விசா (Caregiver Visa)
- முதியோர் மற்றும் உடல் நலக்குறைவுள்ளோருக்கான பராமரிப்பு பணியில் அனுபவம் அல்லது சான்றிதழ் தேவை
- தங்குமிடம், வேலை வழங்குநரின் அனுமதி, மருத்துவக் காப்பீடு போன்றவை தேவை
4. சுயதொழில் விசா (Self-Employment Visa – Lavoro Autonomo)
- தொழில் முனைவோர், முதலீட்டாளர்கள், மற்றும் சுயதொழிலாளர்கள் விண்ணப்பிக்கலாம்
- நிதி நிலைத்தன்மை, தொழில்திட்டம் (Business Plan), வர்த்தகக் குழுவில் பதிவு போன்றவை தேவை
5. EU Blue Card
- உயர் நிபுணத்துவம் (Highly Skilled Workers) வாய்ந்தவர்களுக்கு வழங்கப்படும்
- இத்தாலியின் சராசரி ஊதியத்தை விட அதிக சம்பளம் உள்ள வேலை வாய்ப்பு தேவை
2025 இத்தாலி வேலை விசா விண்ணப்பிக்கும் வழிமுறைகள்
1. வேலை வாய்ப்பு மற்றும் தகுதி சரிபார்க்கவும் - Decreto Flussi திட்டத்தின் கீழ் உள்ள பணியிடங்களுக்கே விண்ணப்பிக்க வேண்டும்.
2. வேலை வழங்குநரின் அனுமதி பெறவும் - இத்தாலிய நிறுவனத்திலிருந்து வேலை நியமனம் மற்றும் Nulla Osta பெற வேண்டும்.
3. இத்தாலி தூதரகத்தில் விண்ணப்பிக்கவும் - தகுதியுள்ளவர்கள் தங்கள் நாட்டிலுள்ள தூதரகத்தில் வேலை விசாவிற்காக விண்ணப்பிக்க வேண்டும்.
4. உள்நுழைவு விசா (Entry Visa) பெற்று இத்தாலிக்கு செல்ல வேண்டும்
5. இத்தாலியில் குடியுரிமை அனுமதி (Permesso di Soggiorno) பெற வேண்டும் - நாட்டிற்கு வந்த 8 நாட்களில் உள்ளூர் குடியேற்ற அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும்.
இத்தாலியில் வேலைவாய்ப்புகளை நாடும் வெளிநாட்டவர்களுக்கு இந்த விசா திட்டம் ஒரு பெரிய சந்தர்ப்பமாக உள்ளது. மேலும், இது இத்தாலியின் தொழிலாளர்கள் பற்றாக்குறையை குறைக்கும் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் முக்கிய நடவடிக்கையாக கருதப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |