பணத்தை வைத்து பண்பை வாங்க முடியாது - அம்பானி குடும்பத்தை குற்றம் சாடிய இத்தாலி மக்கள்
முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் இரண்டாம் திருமண விழா கொண்டாட்டத்தால் இத்தாலியில் உள்ள மக்கள் இன்னல்களை சந்திக்க நேர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
நடுக்கடலில் நிகழ்ந்த திருமண விழா
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (Reliance Industries Limited) உரிமையாளரும் இந்திய தொழிலதிபருமான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி திருமணம் வருகிற ஜூலை 12 திகதி நடைபெறவிருக்கிறது.
இதற்கான முந்தையை கொண்டாட்டத்தை அக்குடும்பத்தில் உள்ளவர்கள் வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.
முந்தைய விழா கொண்டாட்டமானது மார்ச் 1 முதல் 3 வரை ஜாம்நகரில் நடைபெற்றது. அந்த கொண்டாட்டத்தில் ரிஹானா (Rihanna), எகான் (Akon), பில் கேட்ஸ் (Bill Gates), மார்க் ஜுக்கர்பெர்க் (Mark Zuckerberg), ஆனந்த் மஹிந்திரா (Anand Mahindra) என பல பிரபலங்கள் கலந்து கொண்டிருந்தார்கள்.
அதையடுத்து இரண்டாம் திருமண விழா மே 28 முதல் 30 வரை சொகுசு கப்பலில் நடைபெற்றது. இத்தாலியின் நகர துறைமுகத்திலிருந்து புறப்பட்டு தெற்கு பிரான்சில் பயணத்தை முடித்தது.
இந்த விழாவில் சுமார் 800 விருந்தினர்களும் விருந்தினர்களைக் கவனிப்பதற்காக 600 பணியாளர்களும் பணியமர்த்தப்பட்டார்கள்.
இந்நிலையில் அக்கொண்டாட்டமானது இத்தாலியில் உள்ள மக்களுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.
குற்றம் சாட்டிய இத்தாலி மக்கள்
திருமணத்திற்கு முந்தைய ஆடம்பரமான கொண்டாட்டத்திற்காக இத்தாலியில் உள்ள அழகிய கடற்கரை நகரங்களான போர்டோபினோ மற்றும் ஜெனோவா அம்பானி குடும்பத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது.
Money cannot buy manners and character!
— tadkeshwari (@ladytadkeshwari) June 5, 2024
Shame Shame Shame!#Ambani#AnantAmbani #RadhikaMerchant#MukeshAmbani #NitaAmbani pic.twitter.com/6keDfh3IoQ
இயற்கை எழில் சூழ்ந்த இந்த நகரங்களில் அம்பானி குடும்பத்தின் ஆடம்பரமான கொண்டாட்டங்கள் உள்ளூர் மக்களை வருத்தமடையச் செய்துள்ளதாகவும் அவர்களுடைய அன்றாட வேலையை செய்யமுடியாமல் சென்றுள்ளதாக கூறியுள்ளனர்.
ஜூன் 2 அன்று, உல்லாசப் பயணிகளை ஏற்றிச் செல்லும் பயணக் கப்பல் ஜெனோவாவிற்குள் இழுத்துச் செல்லப்பட்டபோது, அதிகாலை மணி நேரத்தில் சத்தமான மேளதாளத்தை எழுப்பினார்கள்.
DISGUSTING BEHAVIOUR,!
— Mabrin Batliwalla (@MabrinB) June 5, 2024
Opulent, vulgar, ugly display of wealth by the Rich and Famous ; notwithstanding bad behaviour on Foreign shores by #Ambani & Gang. pic.twitter.com/e4MTTTnsHS
இது குறித்து பலமுறை உள்ளூர் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |