ஆபாச தளத்தில் பகுதிநேரமாக பணியாற்றிய ஆசிரியை! கூறிய அதிர்ச்சி காரணம்
இத்தாலியில் பாடசாலை ஆசிரியை ஒருவர், ஆபாச தளத்தில் பகுதிநேரமாக பணியாற்றியதற்காக இடைநீக்கம் செய்யப்பட்டார்.
பாடசாலை ஆசிரியை
ஐரோப்பிய நாடான இத்தாலியில் கத்தோலிக்க பாடசாலையில் பணியாற்றி வருபவர் எலெனா மரகா (29).
இவர் வயது வந்தோருக்கான இணையதளத்தில் தனது உள்ளடக்கத்தை விற்றதாக அடையாளம் காணப்பட்டார்.
அதாவது, ஆபாச இணையதளத்தில் பகுதிநேரமாக எலெனா வேலை பார்த்து வந்துள்ளார்.
இதனை அறிந்த மாணவர்களின் பெற்றோர் சிலர், பாடசாலை நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். அதனைத் தொடர்ந்து ஆசிரியை எலெனா மராகா இடைநீக்கம் செய்யப்பட்டார்.
வேறு யாருக்கும் தீங்கு விளைவிக்கவில்லை
எலெனா மராகா இதுகுறித்து கூறுகையில், "ஓய்வு நேரத்தில் நான் செய்தது வேறு யாருக்கும் தீங்கு விளைவிக்கவில்லை. எனது மாத ஊதியம் சுமார் 1,200 யூரோக்கள், இது எனக்கு போதுமானதாக இல்லை.
அதனால்தான் நான் ஏற்கனவே மற்ற தொழில்களைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன். நன்றாக சம்பாதிக்கும் நண்பர்களை நான் அறிவேன். நான் அடைந்த உடல் ரீதியான பலன்களைப் பற்றி நான் பெருமைப்படுகிறேன், அவற்றைக் காட்ட விரும்புகிறேன் என்று நினைத்தேன்" என ஊடகத்திடம் தெரிவித்தார்.
கல்வி அறிவியலில் பட்டம் பெற்ற எலெனா மராகா, ஒரு கத்தோலிக்க நர்சரி பாடசாலையில் 5 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |