இனி திருமணமாகாதவர்களும் தத்தெடுக்கலாம்! இத்தாலியில் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு
இத்தாலி நாட்டில் இனி திருமணமாகாதவர்களும் தத்தெடுக்கலாம் என வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
திருமணமாகாதவர்கள் தத்தெடுப்பு
இத்தாலியில் 1983-ம் ஆண்டு இயற்றப்பட்ட சர்வதேச தத்தெடுப்பு சட்டத்தின்படி, திருமணமான தம்பதியர் மட்டுமே வெளிநாட்டு குழந்தைகளை தத்தெடுக்க முடியும். இது ஒரு பாரபட்சமான சட்டமாக இருந்து வந்தது.
இந்நிலையில் இதற்கு எதிராக, குழந்தை தத்தெடுப்புக்கான இத்தாலிய சங்கம் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த நிலையில், நீதிமன்றம் தற்போது ஒரு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது.
தத்தெடுப்பு சட்டத்தில் திருத்தம்
வெளிநாட்டு குழந்தைகளை தத்தெடுப்பது சமீப காலமாக குறைந்து வருவதால், குழந்தைகளை குடும்ப சூழலில் வளர்ப்பது அவர்களின் அடிப்படை உரிமை என நீதிமன்றம் கூறியுள்ளது.
எனவே, 40 ஆண்டுகளுக்கு முந்தைய சர்வதேச தத்தெடுப்பு சட்டத்தை நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
இதனால், இனி திருமணம் ஆகாதவர்களும் வெளிநாட்டு குழந்தைகளை தத்தெடுக்க முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது.
சர்வதேச தத்தெடுப்பு சட்டங்கள்
ஜேர்மனி, பிரான்ஸ், பிரித்தானியா போன்ற நாடுகளில் ஏற்கனவே திருமணம் ஆகாதவர்கள் குழந்தைகளை தத்தெடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த நாடுகளில் உள்ள தத்தெடுப்பு சட்டங்களை போல, இத்தாலியிலும் சட்டம் மாற்றப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |