புடினுக்கு சொந்தமான சொகுசு படகை சிறைப்பிடித்ததா இத்தாலி? கடற்படை அதிகாரிகள் அதிரடி!
ரஷ்ய ஜனாதிபதி புடினுக்கு சொந்தமான 570 மில்லியன் பவுண்டுகள் மதிப்பு கொண்ட அதிவிரைவு படகை இத்தாலியின் அரசு அதிகாரிகள் சிறைபிடித்துள்ளனர்.
உக்ரைன் மீதான போர் நடவடிக்கையை கண்டித்து ஐரோப்பிய நாடுகளின் கூட்டமைப்பான ஐரோப்பிய ஒன்றியம் பல்வேறு பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன.
அந்தவகையில், ரஷ்ய அரசுடன் தொடர்பு இருப்பதாக தெரிவித்து கடந்த மார்ச் மாதம் இத்தாலிய கடற்பரப்பில் நுழைந்த 570 மில்லியன் பவுண்டுகள் மதிப்பு கொண்ட அதிவிரைவு படகை அந்த நாட்டின் கடற்படை விசாரணைகாக சிறைப்பிடித்தது.
570 மில்லியன் பவுண்டுகள் மதிப்பும், 450 அடி நீளமும் கொண்ட இந்த Scheherazde அதிவிரைவு படகு, நீச்சல்குளங்கள், இரண்டு விமானதளங்கள் என பல்வேறு வசதிகளை உள்ளடக்கியள்ளது.
இந்த அதிவிரைவு Scheherazde படகானது, ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருளாதார தடைகளை மீறி சர்வதேச நீரோட வழியில் நழுவ முயன்றதை தொடர்ந்து, இந்த Scheherazde கப்பலை இத்தாலிய அதிகாரிகள் சிறைப்பிடித்து பீசாவிற்கு அருகிலுள்ள மரினா டி கராராவில் கப்பல்துறையில் நிறுத்தியுள்ளது.
இந்தநிலையில், இதுகுறித்து இத்தாலிய நிதிக் காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், Scheherazde படகின் உரிமையாளரும், ரஷ்யாவின் மூத்த அரசியல்வாதிகளுக்கும் இடையே குறிப்பிடதக்க பொருளாதார தொடர்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது என தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த கூறுகளின் அடிப்படையில், இந்தப் படகு தற்போதைய ஐரோப்பிய ஒன்றியத் தடைகள் பட்டியலில் இடம் பெற பரிந்துரைக்கப்பட்டதுடன் விசாரணைக்காக சிறைப்பிடிக்க பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
கூடுதல் செய்திகளுக்கு: ஏரிவாயு கசிவினால் புகழ்பெற்ற நட்சத்திர ஹோட்டலில் பயங்கர வெடிவிபத்து: 22 பேர் பலி!
இந்த நிலையில், இத்தாலிய அதிகாரிகளால் சிறைப்பிடிக்கபட்ட Scheherazde அதிவிரைவு படகு ரஷ்ய ஜனாதிபதி புடினுக்கு சொந்தமான படகு என பிணைக்கைதியாக சிறைப்பிடிக்கப்பட்ட ரஷ்யாவின் எதிர்கட்சி தலைவர் Alexei Navalny தெரிவித்துள்ளார்.