பெண்களே குடிக்காதீர்கள்..! இளம் பெண் துஷ்பிரயோக விவகாரத்தில் இத்தாலி பிரதமரின் கணவர் சர்ச்சை கருத்து
பெண்கள் மதுபானம் குடிப்பதை நிறுத்தி விட்டால் தேவையற்ற சில பிரச்சனைகளை தவிர்க்கலாம் என இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி-யின் கணவர் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையாகியுள்ளது.
சர்ச்சை கருத்து
இத்தாலியின் கடந்த ஆண்டு அக்டோபரில் நடந்த தேர்தலில் ஜார்ஜியா மொலோனி பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்நிலையில் இத்தாலியின் சிசிலி நகரின் பாலர்மோ பகுதியில் சமீபத்தில் இளம்பெண் ஒருவர் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டது குறித்து பிரதமர் ஜார்ஜியா மொலோனி-யின் கணவர் ஆண்டிரியா கியாம்புருனோ தொலைக்காட்சியின் டெய்லி டைரி என்ற நிகழ்ச்சியில் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.
Reuters
அதில், பெண்கள் நீங்கள் நடனமாட செல்லும் போது அங்கு குடிப்பதற்கான ஒவ்வொரு உரிமையும் உங்களுக்கு உள்ளது, அங்கு எந்தவொரு தவறான புரிதலும் பிரச்சனையும் இருக்க கூடாது.
ஆனால் பெண்கள் மதுபானம் குடிக்காமல் தங்கள் சுயநினைவை இழக்காமல் தவிர்த்து விட்டால் இது போன்ற பிரச்சனைகளில் மற்றும் சில ஓநாய்கள் உங்கள் முன் வருவதை தவிர்த்து விடலாம் என கருத்து தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிகள் கண்டனம்
இதனை தொடர்ந்து ஆண்டிரியா கியாம்புருனோ கருத்துக்கு எதிர்கட்சிகள் கடுமையான கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
Reuters
பெண்கள் எவ்வாறு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அறிவுரை வழங்குவதற்கு பதிலாக ஆண்கள் எப்படி கண்ணியத்துடன் இருக்க வேண்டும் என்று கற்றுக் கொடுங்கள் என்று எதிர் கட்சியை சேர்ந்த செசிலியா டிஎலியா கண்டனம் தெரிவித்துள்ளார்.
கணவரின் கருத்து கண்டனங்கள் அதிகரித்து வரும் நிலையில், இது தொடர்பாக பிரதமர் ஜார்ஜியா மொலோனி எத்தகைய கருத்தையும் தெரிவிக்கவில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |