பிரித்தானியர்களின் விருப்ப சுற்றுலாத் தலத்தில் மேலாடையின்றி செல்ல தடை: அறிவித்த நகரம்
இத்தாலியில் உள்ள பிரபலமான சுற்றுலா இடங்களில் மது அருந்துதல், வெறுங்காலுடன் நடப்பது உள்ளிட்ட பல தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.
சிறிய கடலோர நகரம்
இத்தாலியின் லிகுரியவில் உள்ள ஒரு சிறிய கடலோர நகரமான Portofino, சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும் இடமாகும்.
குறிப்பாக, பிரித்தானியர்களுக்கு மிகவும் விருப்பமான சுற்றத்தலமாக இந்த நகரம் உள்ளது. இங்கு தற்போது பல்வேறு தடைகள், அபராதம் உள்ளிட்ட புதிய நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
Portofinoவில் பயணிகள் இனி நகரத்தின் வழியாக வெறுங்காலுடன், நீச்சல் உடையில் அல்லது மேலாடையின்றி நடக்க முடியாது அல்லது இந்த நிலைமைகளில் எதிலும் Piazzaயில் உட்கார முடியாது.
பொது வீதிகளில் மது அருந்துவதும் தடை செய்யப்பட்டுள்ளது. உணவகங்கள், பார்கள் மற்றும் நியமிக்கப்பட்ட பகுதிகளில் மட்டுமே மது அருந்த அனுமதிக்கப்பட்டுள்ளது.
புதிய அவசர சட்டம்
அதேபோல் வீதிகள், சுவர்கள், நடைபாதைகள் மற்றும் பூங்காக்களில் யாசகம் கேட்பது, உட்காருவது அல்லது படுத்துக் கொள்வதும் தடைசெய்யப்பட்டுள்ளது.
இந்த தடைகள் நகர மேயர் Matteo Viacavaவின் புதிய அவசர சட்டமாக கொண்டுவரப்பட்டுள்ளது. எனினும் இவை கோடை காலத்தில் அமுலுக்கு வந்து, செப்டம்பர் 30 அன்று தற்காலிகமாக காலாவதியாகும்.
அதற்கு முன்பு விதிமுறைகளை மீறுபவர் பிடிபட்டால் 22 முதல் 433 யூரோக்கள் வரை அபராதம் விதிக்கப்படும். இதற்கு காரணம், 400 மக்கள் மட்டுமே வசிக்கும் நகரமாக இருப்பதுதான்.
இங்கு உச்ச பருவத்தில் 100,000 சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் பிரத்யேக கடலோர ரிசார்ட்டில் 'குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் அமைதியைப்' பாதுகாப்பதே சமீபத்திய நடவடிக்கையின் நோக்கம் என்று கூறப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |