மேல் சட்டை அணியாமல் நடமாடினால் அபராதம்: எந்த நாட்டில் தெரியுமா?
இத்தாலியிலுள்ள கிராமம் ஒன்று, மேல் சட்டை அணியாமலோ, நீச்சல் உடையிலோ நடமாடினால் 200 யூரோக்கள் வரை அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்துள்ளது.
மேல் சட்டை அணியாமல் நடமாடினால்...
இத்தாலியிலுள்ள Varenna கிராமம், வெறும் 650 பேர் மட்டுமே வாழும் கிராமம்.
ஆனால், அது சுற்றுலாப்பயணிகளை கவர்ந்திழுக்கும் அழகான கிராமம் என்பதால் அங்கு சுற்றுலாப்பயணிகள் குவிகிறார்கள்.

சமீப காலமாக பல நாடுகளிலுள்ள கிராம மக்கள், தங்கள் ஊரில் சுற்றுலாப்பயணிகள் எக்கச்சக்கமாக நடமாடுவதை தொல்லையாக நினைக்கத் துவங்கியுள்ளார்கள் என்பது குறித்த செய்திகள் வெளியாகிவருகின்றன.
அரசாங்கங்களுக்கோ சுற்றுலாவால் வரும் வருவாய் முக்கியம். ஆனால், உள்ளூர் மக்களுக்கு சில நேரங்களில் சுற்றுலாப்பயணிகள் இடையூறாகிவிடுகிறார்கள்.
இப்படிப்பட்ட ஒரு சூழலில், இத்தாலியிலுள்ள Varenna கிராமம், சுற்றுலாப்பயணிகளுக்கு சில நெறிமுறைகளை வகுத்துள்ளது.
நீங்கள் கடற்கரைகளில் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், ஊருக்குள் செல்லும்போது, கடைகள், உணவகங்கள், தேவாலயங்கள் போன்ற இடங்களுக்குச் செல்லும்போது, மேல் சட்டை அணியாமலோ அல்லது நீச்சல் உடையிலோ நடமாடக்கூடாது.
அப்படி சரியான உடை இல்லாமல் நடமாடினால், சுற்றுலாப்பயணிகளுக்கு 50 முதல் 200 யூரோக்கள் வரை அபராதம் விதிக்கப்படும்.
அதேபோல, குழுக்களாக சுற்றுலா வரும்போது, ஒரு குழுவில் 25 பேருக்கு மேல் இருக்கக்கூடாது.
Varennaவின் தெருக்களை அடைத்துக்கொண்டு நிற்கக்கூடாது, வழிகாட்டிகள் ஒலிபெருக்கிகளை பயன்படுத்தக்கூடாது.
அதாவது, நீங்கள் ஊரைச் சுற்றிப் பார்க்க வருவதில் பிரச்சினையில்லை. ஆனால், உள்ளூர் மக்களுக்கு இடைஞ்சலாகிவிடக்கூடாது என்பதற்காகத்தான் இந்த கட்டுப்பாடுகள்!
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |