ஈரானுக்கு எதிரான சண்டையில் ஈடுபட மாட்டோம்: ஐரோப்பிய நாடொன்று திட்டவட்டம்
ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையில் பங்கேற்க மாட்டோம் என்று இத்தாலி திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
ஈரானுக்கு எதிரான நடவடிக்கையில் இத்தாலி பங்கேற்காது
மத்திய கிழக்கில் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ஈரானுக்கு எதிரான எத்தகைய இராணுவ எதிர்ப்பு நடவடிக்கையிலும் இத்தாலி ஈடுபடாது என்று புதன்கிழமை அந்நாட்டு பிரதமர் ஜார்ஜியா மெலோனி அறிவித்துள்ளார்.

துருக்கியின் அங்காராவில் நடைபெற்று வரும் நேட்டோ(NATO) உச்சி மாநாட்டில் கலந்து கொண்டிருந்த போது செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் ஜார்ஜியா மெலோனி இது தொடர்பான கருத்தினை தெரிவித்துள்ளார்.
அதில், அமெரிக்கா - ஈரான் - இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு இடையே மோதல் தொடங்கிய ஆரம்பத்தில் இருந்தே எங்களின் நிலைப்பாடு மிகவும் தெளிவாக இருப்பதாகவும், ஈரானுக்கு எதிரான எந்தவொரு தாக்குதல்களிலும் இத்தாலி பங்கேற்காது என்பதில் தொடக்கத்தில் இருந்து தற்போது வரை மாறாமல் இருப்பதாகவும் பிரதமர் ஜார்ஜியா மெலோனி உறுதிப்படுத்தியுள்ளார்.

நிலைப்பாட்டில் உறுதியாக நிற்கும் இத்தாலி
மத்திய கிழக்கில் ஈரானுடனான பதற்றம் அதிகரித்ததில் இருந்து இத்தாலி தெளிவாக இராணுவ தலையீடுகளில் இருந்து விலகி உறுதியாக நின்று வருகிறது.
உதாரணமாக மத்திய கிழக்கு நோக்கி பறக்கும் அமெரிக்க போர் விமானங்கள் சிசிலியில் உள்ள சிகோநெல்லா விமானப்படை தளத்தை பயன்படுத்த மார்ச் மாதம் இத்தாலி மறுப்பு தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |