2019ல் ஆர்டர் செய்த பொருள்.. 2023ல் டெலிவரி ஆன வினோதம்
இந்தியாவின் டெல்லியை சேர்ந்த நபர் ஒருவர் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஆர்டர் செய்த பொருளானது தற்போது டெலிவரி ஆனதால் அதிர்ச்சியில் உறைந்துவிட்டார்.
சமீபகாலமாக ஓன்லைன் வர்த்தக தளங்களின் பயன்பாடு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது, எதை வேண்டுமானாலும் ஆர்டர் செய்யலாம், வீட்டில் இருந்தபடியே வேலையை சுலபமாக முடித்துவிடலாம், தள்ளுபடி என எக்கச்சக்க காரணங்களை அடுக்கிக் கொண்டே செல்லலாம்.
இந்நிலையில் டெல்லியை சேர்ந்த நிதி அகர்வால் என்பவர், நான்கு ஆண்டுகளுக்கு முன் அதாவது 2019ம் ஆண்டு ஆர்டர் செய்த பொருளை 2023ம் ஆண்டில் பெற்றுள்ளார்.
Never lose hope! So, I ordered this from Ali Express (now banned in India) back in 2019 and the parcel was delivered today. pic.twitter.com/xRa5JADonK
— Tech Bharat (Nitin Agarwal) (@techbharatco) June 21, 2023
இதுபற்றி டுவிட்டரில் அவர் பதிவிட, சிறிது நேரத்தில் வைரலாகிவிட்டது, அதில், எப்போதும் நம்பிக்கையை இழக்காதீர்கள், அலி எக்ஸ்பிரஸ் (தற்போது இந்தியாவில் தடை செய்யப்பட்டுவிட்டது) 2019ம் ஆண்டு ஒரு பொருளை ஆர்டர் செய்திருந்தேன், 4 வருடங்கள் கழித்து டெலிவரி ஆகிவிட்டது என குறிப்பிட்டுள்ளார்.
இத்துடன் பார்சலின் புகைப்படத்தையும் இணைத்துள்ளார், அதில், மே 2019 என்ற அவர் ஆர்டர் செய்த தேதியானது அச்சிடப்பட்டுள்ளது.
சீனாவை சேர்ந்த பன்னாட்டு நிறுவனமான அலி எக்ஸ்பிரஸ் இந்தியாவில் தடை செய்யப்பட்டு விட்டது, இருந்தபோதும் டெலிவரி செய்தது எப்படி என்பது தான் பலரது கேள்வியும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |