எனக்கு எல்லா நாடுகளிலும் குழந்தைகள் வேண்டும்: 100 குழந்தைகளின் தந்தையின் ஆசை
32 வயதில் 100 குழந்தைகளுக்கு தந்தையாகிவிட்ட அமெரிக்கர் ஒருவர், தனக்கு உலக நாடுகள் எல்லாவற்றிலும் குழந்தைகள் வேண்டும் என்று கூறியுள்ளார்.
100 குழந்தைகளின் தந்தையின் ஆசை
அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்தவர் கைல் (Kyle Gordy, 32).
உயிரணு தானம் செய்பவரான கைல், தனது உயிரணு தானத்தின் மூலம் சுமார் 100 குழந்தைகளுக்கு தந்தையாகியுள்ளார்.
அதாவது, ஏற்கனவே 87 குழந்தைகளுக்கு கைல் தந்தையாகிவிட்டார். இன்னும் சில மாதங்களில் அவரது உயிரணு தானம் மூலம் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 100 ஆக உள்ளது.
இந்நிலையில், தனக்கு உலக நாடுகள் எல்லாவற்றிலும் குழந்தைகள் வேண்டும் என்னும் தனது ஆசையை வெளிப்படுத்தியுள்ளார் கைல்.
ஜப்பான், அயர்லாந்து மற்றும் கொரியாவிலுள்ள பெண்களுக்கு உயிரணு தானம் செய்துவிட்டால் தனது ஆசை நிறைவேறிவிடும் என்கிறார் கைல்.
அதாவது, இந்த மூன்று நாடுகள் தவிர, மற்ற எல்லா நாடுகளிலும் உயிரணு தானம் செய்துவிட்டார் கைல்!
என்றாலும், திருமணம் செய்துகொள்வதானால், அயர்லாந்து பெண் ஒருவரைத்தான் திருமணம் செய்துகொள்வேன், அங்கு செட்டில் ஆவதுதான் எனது ஆசை என்றும் கூறியுள்ளார் கைல்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |