நியூசிலாந்து பிரதமரின் அந்த ஒற்றை புகைப்படம்: கடும் கொந்தளிப்பை ஏற்படுத்திய சம்பவம்
நியூசிலாந்து பிரதமரின் புகைப்படம் ஒன்று ஆபாசமாக சித்தரிக்கப்பட்டு, சமூக ஊடக பக்கத்தில் பதிவேற்றியுள்ள சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
நியூசிலாந்தை சேர்ந்த Calendar Girls என்ற நிறுவனம் தங்கள் சமூக ஊடக பக்கத்தில் பிரதமர் ஜெசிந்தா ஆர்டனின் புகைப்படம் ஒன்றை ஆபசமாக சித்தரித்து வெளியிட்டிருந்தது.
வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட அந்த புகைப்படம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் சனிக்கிழமை அந்த நிறுவனத்தால் நீக்கப்பட்டுள்ளது.
ஆனால், பிரதமரை ஆபாசமாக சித்தரித்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டதாக கூறி பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த ஆபாசமாக சித்தரிக்கப்பட்ட புகைப்படத்தை பதிவேற்றியுள்ள அந்த நிறுவனம், அதில், இன்று மட்டும் பங்கேற்கும் சிறப்பு விருந்தினர் எனவும் குறிப்பிட்டுள்ளது.
குறித்த சமூக ஊடக பக்கத்தை பார்வையிடும் வாடிக்கையாளர்கள், அந்த புகைப்படமானது பிரதமர் ஜெசிந்தாவுக்கு ஏற்படுத்தும் அவமரியாதை எனவும், அந்த நிறுவனத்தின் ஊழியர்களுக்கும் இதனால் அவப்பெயர் ஏற்படும் என குறிப்பிட்டுள்ளனர்.
இந்த நிலையில், குறித்த புகைப்படம் தொடர்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், விசாரணை முன்னெடுக்கப்படும் எனவும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் குறித்த Calendar Girls நிறுவனம் 200,000 டொலர் வரையில் அபராதம் செலுத்த நேரிடும் எனவும், தனிப்பட்ட நபர் என்றால் 50,000 டொலர் அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிய வந்துள்ளது.