கனடாவின் தரமான செய்கை... மிக மோசமான செயல் என கொந்தளித்த ஜாக் டேனியலின் CEO
ஜனாதிபதி ட்ரம்பின் அதிரடி நடவடிக்கையால் கனடா மற்றும் அமெரிக்கா இடையேயான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
பழிவாங்கும் நடவடிக்கை
ட்ரம்பின் வரி விதிப்பு வலியை உணர்த்த பல கனேடிய மாகாணங்கள் அமெரிக்க தயாரிப்பு மதுபானங்களை தங்கள் கடைகளில் இருந்து நீக்கி வருகிறது. ட்ரம்பின் 25 சதவிகித வரி விதிப்புக்கு நேரடியான பதில் இதுவென்றே பல மாகாண நிர்வாகங்கள் பதிலளித்துள்ளன.
இந்த நிலையில் ஜாக் டேனியஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான Lawson Whiting, கனடாவின் பழிவாங்கும் நடவடிக்கையை கண்டித்து, இது வரி விதிப்பை விட மோசமானது என்றும் அமெரிக்க வரிகளுக்கு சமமற்றது என்றும் கொந்தளித்துள்ளார்.
எங்களுக்கான விற்பனையை நிராகரிப்பது முறையல்ல என குறிப்பிட்டுள்ள Lawson Whiting, எங்கள் தயாரிப்புகளை மொத்தமாக அப்புறப்படுத்துவது சட்டத்திற்கு புறம்பானது என்றும் தெரிவித்துள்ளார்.
உலகின் மிகப்பெரிய மது வாங்குபவர்களில் ஒருவர் என அடையாளப்படுத்தப்பட்டுள்ள ஒன்ராறியோவின் LCBO அமைப்பு, செவ்வாய்க்கிழமை முதல் அமெரிக்க தயாரிப்பு மதுபானங்கள் அனைத்தையும் விற்பனையில் இருந்து நீக்கியுள்ளது.
விற்பனை செய்ய முடியாது
ஒன்ராறியோ ப்ரீமியர் டக் ஃபோர்டு தெரிவிக்கையில், LCBO ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 1 பில்லியன் டொலர் மதிப்புள்ள அமெரிக்க மதுபானத்தை விற்பனை செய்கிறது என்றார். ஆனால், அமெரிக்க மதுபானங்கள் இனி விற்பனைக்கு வைக்கப்படாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், LCBO முடிவால் மாகாணத்தில் உள்ள பிற சில்லறை விற்பனையாளர்கள், பார்கள் மற்றும் உணவகங்கள் இனி அமெரிக்க தயாரிப்புகளை மீண்டும் விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றே கூறப்படுகிறது.
ட்ரம்ப் வரிவிதிப்புக்கு பதிலடியாக அமெரிக்க பொருட்கள் மீதும் கனடா 25 சதவிகித வரி விதித்துள்ளது. ஆனால் ஒன்ராறியோ நோவா ஸ்கொடியா போன்ற மாகாணங்கள் சில கடும்போக்கு நடவடிக்கைகளையும் அமெரிக்காவுக்கு எதிராக எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |