10 சிறுவனை கடித்து குதறி கொன்ற நாய்...உரிமையாளர்களுக்கு சிறைத் தண்டனை!
பிரித்தானியாவின் கேர்ஃபில்லி அருகே கடந்த ஆண்டு ஜாக் லிஸ்(10) என்ற சிறுவனை கடித்து கொன்ற நாயின் உரிமையாளர்கள் நான்கு ஆண்டுகள் வரை சிறையில் அடைக்கப்பட்டனர்.
பிரித்தானியாவில் கேர்ஃபில்லி அருகே கடந்த ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி பள்ளி முடிந்து நண்பருடன் விளையாடி கொண்டு இருந்த ஜாக் லிஸ்(10) என்ற சிறுவனை பீஸ்ட் என அழைக்கப்படும் அமெரிக்க புல்லி அல்லது எக்ஸ்எல் புல்லி வகை நாய் ஒன்று கடித்து குதறியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனைத் தொடர்ந்து ஜாக் லிஸ்சை காப்பாற்றும் முயற்சியில் அவரை கடித்து குதறிய நாயை பென்ட்வினில் உள்ள வீட்டில் வைத்து காவல்துறையினர் சுட்டுக் கொன்றனர்.
இந்தநிலையில், இந்த துயர சம்பவம் குறித்து நீதிமன்றத்தில் நடத்தப்பட்ட விசாரணையில், அந்த நாயின் உரிமையாளர்களான பிராண்டன் ஹைடன் (19) என்ற நபருக்கு 4 ஆண்டுகள் சிறைதண்டனையும், எமி சால்டர்(29) என்ற பெண்மணிக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் அவர்கள் வாழ்நாள் முழுவதும் நாய் வளர்ப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜாக் லிஸ்சை தாக்கி கொலை செய்வதற்கு முன்பும் இரண்டு நபர்கள் வரை அந்த நாய் கடித்து இருப்பதாகவும், அந்த நாயை உரிமையாளர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை எனவும் நீதிமன்ற விசாரணையில் cctv ஆதாரத்துடன் நிருபிக்கப்பட்டுள்ளது.
ஜாக் லிஸ் இழப்பு குறித்து நீதிமன்றத்தில் பேசிய சிறுவனின் தாயார், ஜாக் லிஸ் இழப்பு எங்களது குடும்பம் மற்றும் நண்பர்கள் மத்தியில் பெரும் பிளவை ஏற்படுத்தி இருப்பதாக வருத்ததுடன் தெரிவித்தார்.
கூடுதல் செய்திகளுக்கு: ரூவாண்டாவிற்கான முதல் விமானத்திற்கு அனுமதி: பிரித்தானிய உயர்நீதிமன்றம் உத்தரவு!
அத்துடன் ஜாக் லிஸ் இறப்பிற்கு பிறகு, நான் என் கண்களை மூடும்போது எல்லாம் அந்த விலங்கு மற்றும் அதன் பற்களைப் பார்க்கிறேன், மேலும் அது குரைக்கும் சத்தம் கேட்கிறேன். நான் இப்போது பீதி தாக்குதல்கள் மற்றும் கடுமையான பின்கால நினைவுகளால் அவதிப்படுகிறேன்." என கண்ணீருடன் பேசினார்.