5 விக்கெட் வீழ்த்திய என் அன்பார்ந்த கணவருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்! ஜடேஜாவின் மனைவி நெகிழ்ச்சி பதிவு
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 5 விக்கெட் வீழ்த்தி வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்த ஜடேஜாவுக்கு, அவரது மனைவி வாழ்த்து கூறி ட்வீட் செய்துள்ளது வைரலாகியுள்ளது.
மிரட்டிய ஜடேஜா
கொல்கத்தாவில் நடந்த உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணி 243 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது.
AP
தென் ஆப்பிரிக்க அணி 83 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆக முக்கிய காரணமாக அமைந்தது ரவீந்திர ஜடேஜா. அவர் கிளாசென், மில்லர் என மொத்தம் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி மிரட்டினார்.
இந்த மனிதருக்கு கைகுலுக்கி ஒன்றை கூற காத்திருக்கிறேன்! கோலி குறித்து நெகிழ்ச்சியுடன் பதிவிட்ட நெதர்லாந்து வீரர்
அத்துடன் துடுப்பாடியபோது 15 பந்துகளில் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 29 ஓட்டங்களும் விளாசினார்.
IANS/Biplab Banerjee
கணவருக்கு வாழ்த்து
இந்த நிலையில் ஜடேஜாவின் மனைவி ரிவபா தனது கணவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். எக்ஸ் பக்கத்தில் அவரது பதிவில்,
'தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 5 விக்கெட்டுகளை அபாரமாக வீழ்த்தியதற்காக எனது அன்பான கணவர் ரவீந்திர ஜடேஜாவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்! உங்கள் கடின உழைப்பும், அர்ப்பணிப்பும் பிரகாசிக்கின்றன. இந்தியாவுக்கு மற்றொரு த்ரில் வெற்றி!' என தெரிவித்துள்ளார்.
Huge congratulations to my lovely husband, Ravindra Jadeja, for his phenomenal 5-wicket haul against South Africa! Your hard work and dedication shine through. Another thrilling victory for India!@imjadeja pic.twitter.com/tprtkTm5Iy
— Rivaba Ravindrasinh Jadeja (@Rivaba4BJP) November 5, 2023
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |