முட்டை பப்ஸ்க்கு மட்டும் ரூ.3.6 கோடி செலவு செய்த ஜெகன் மோகன் ரெட்டி.., புதிய சிக்கல் ஆரம்பம்
ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியில் முட்டை பப்ஸ்க்கு மட்டும் ரூ.3.6 கோடி செலவு செய்ததாக தெலுங்கு தேசம் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
நடந்து முடிந்த ஆந்திர மாநில சட்டமன்ற தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டி தோல்வி அடைந்தார். இந்த தேர்தலில் தெலுங்கு தேச கட்சி பெரும்பான்மையான வெற்றி பெற்றது.
பின்னர், ஆந்திர மாநில முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு 4-வது முறையாக பதவியேற்றுக்கொண்டார். இந்நிலையில், ஜெகன்மோகன் ரெட்டிக்கு வரிசையாக பிரச்சனைகள் வந்து கொண்டு இருக்கின்றன.
முட்டை பப்ஸ்க்கு செலவு
அந்தவகையில், ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியில் முட்டை பப்ஸ்க்கு மட்டும் ரூ.3.6 கோடி செலவு செய்ததாக தெலுங்கு தேசம் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
அதாவது ஜெகன்மோகன் ரெட்டி முதலமைச்சராக இருந்த காலத்தில் அலுவலகத்துக்கு நாள் ஒன்றுக்கு சுமார் 993 முட்டை பப்ஸ்கள் வாங்கப்பட்டு வந்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளது.
அவர் ஆட்சியில் இருந்த 2019 முதல் 2024 வரையிலான கால கட்டத்தில் முதலமைச்சர் அலுவலகத்திற்காக வருடத்துக்கு ரூ.72 லட்சத்திற்கு முட்டை பப்ஸ்கள் வாங்கப்பட்டுள்ளது.
அதன்படி, மொத்தம் ரூ.3.6 கோடி செலவு செய்ததாக சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |