ரூ.75 லட்சம் கொடுக்கவில்லை.., ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் நெல்சன் மனைவி விளக்கம்
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணனின் வங்கி கணக்கிற்கு ரூ.75 லட்சம் அனுப்பியதாக பரவும் தகவல் ஆதாரமற்றவை என்று நெல்சன் மனைவி விளக்கம் அளித்துள்ளார்.
நெல்சன் மனைவிக்கு தொடர்பு?
பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5 -ம் திகதி மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஆஜரான கூலிப்படையினர், ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழி வாங்கவே கொலை செய்தோம் என்று தெரிவித்தனர்.
இந்த வழக்கில் பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில் பல திருப்பங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த வழக்கு தொடர்பாக சமீபத்தில், ரவுடி நாகேந்திரன் மகனும் காங்கிரஸ் முன்னாள் நிர்வாகியுமான அஸ்வத்தாமனை பொலிஸார் கைது செய்தனர்.
இதனைத்தொடர்ந்து, வேலுர் சிறையில் உள்ள ரவுடி நாகேந்திரனை பொலிஸார் கைது செய்த நிலையில், தற்போது வரை மொத்தம் 23 பேர் கைதாகியுள்ளனர்.
இந்த நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடிக்கும் தொடர்பு இருப்பதாக தகவல் வந்த நிலையில் 24 -வது நபராக பொலிஸார் அவரை கைது செய்தனர்.
இந்த வழக்கில் தேடப்படும் ரவுடி சம்போ செந்திலின் கூட்டாளி மொட்டை கிருஷ்ணன் என்பவருடன் தொலைபேசியில் மோனிஷா பேசியதாக தகவல் வெளிவந்த நிலையில் பொலிஸார் விசாரணை செய்துள்ளனர்.
மேலும், நெல்சன் மனைவியின் வங்கி கணக்கில் இருந்து ரூ.75 லட்சம் மொட்டை கிருஷ்ணன் என்பவரின் வங்கி கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், இருவரும் சென்னை சென்னை எம்ஆர்சி நகரில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் சந்தித்துள்ளதும் விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.
மோனிஷா மறுப்பு
இந்த விவகாரம் தொடர்பாக பணம் அனுப்பியதாக பரவும் தகவல் ஆதாரமற்றவை என்று இயக்குநர் நெல்சன் மனைவி விளக்கம் அளித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில், "வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணன் என்பவரது வங்கி கணக்கிற்கு பண பரிவர்த்தனை செய்யப்பட்டதாக பரவும் தகவல் உண்மை இல்லை, அது முற்றிலும் தவறான தகவல்.
அடிப்படை ஆதராமற்ற தகவல்களை சிலர் பரப்புகிறார்கள். அவ்வாறான தகவல்களை பரப்ப வேண்டாம்.
அடிப்படை ஆதாரமற்ற தகவல்களை பரப்புவது எனக்கும், என் கணவர் இயக்குநர் நெல்சனின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் செயல்.
தவறான செய்தியை பதிவிட்டவர்கள் அதனை நீக்க வேண்டும். அவ்வாறு நீக்கவில்லை என்றால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |