ஜப்பானில் திறக்கப்பட்ட பானி பூரி கடை: குவிக்கும் ஜப்பானியர்கள்: வைரல் வீடியோ
ஜப்பானில் திறக்கப்பட்டுள்ள பானி பூரி கடை ஒன்று உள்ளூர்வாசிகள் மற்றும் சுற்றுலா பயணிகளிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
ஜப்பானில் கூட கிடைக்கும் இந்தியாவின் பானி பூரி
பொதுவாக வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் அங்குள்ள இந்திய உணவகங்களை கண்டுபிடித்து இந்திய சுவைகளை அனுபவிப்பது என்பது மிகவும் சிரமமானது. அதிலும் ஜப்பான் போன்ற தொலைதூர நாடுகளில் இந்திய உணவுகள் கிடைப்பது என்பது அரிது.
இந்நிலையில் இந்தியர் ஒருவர் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜக்கு தாபா(Jaggu Dhaba) என்ற உணவகத்தை தொடங்கி உள்ளூர்வாசிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் இடையே வரவேற்பை பெற்றுள்ளார்.
இது தொடர்பாக “ஜப்பான் வாலா பிஹாரி”(Japan Wala Bihari) என்ற சமூக ஊடக கணக்கில் இருந்து வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அந்த வீடியோவில், கடையின் உரிமையாளர் தன்னை ஜப்பானில் பாட்னாகாரரின் உணவகம் என்று அறிமுகப் படுத்திக் கொள்கிறார்.
ஜக்கு தாபாவில் கிடைக்கும் உணவுகள்
மேலும், இது வெறும் உணவகம் மட்டுமல்ல. ஜப்பானில் வசிக்கும் இந்தியர்கள் தங்கள் தாய்நாட்டின் நினைவுகளை வழங்கும் பாலமும் கூட என தெரிவிக்கிறார்.

இந்த கடையில், பானி பூரி, சமோசா சாட், சேவ் பூரி, தஹி பல்லா, மசாலா அப்பளம் மற்றும் பக்கோடா போன்ற இந்திய தெருவோர உணவுகள் மிகவும் சுவையுடன் கிடைக்கின்றன.
அத்துடன் பாரம்பரிய உணவுகளான பட்டர் சிக்கன், மட்டன் கறி, பன்னீர் டிக்கா, சீரக சோறு, சூடான நான் ஆகியவை கிடைக்கின்றன.
ஜக்கு தாபாவில் இனிப்பு வகைகளும் மிகவும் பிரபலமாக உள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |