விளையாட்டு வீராங்கனைகளை துஷ்பிரயோகம் செய்த மருத்துவர் மீது சிறையில் தாக்குதல் ஏன்? காரணம் வெளியானது
அமெரிக்காவில், 250 தடகள வீராங்கனைகளை துஷ்பிரயோகம் செய்த மருத்துவர், சிறையில் சரமாரியாக கத்தியால் குத்தப்பட்டார்.
250 தடகள வீராங்கனைகளை துஷ்பிரயோகம் செய்த மருத்துவர்
அமெரிக்க பெண்கள் தேசிய தடகள அணியின் மருத்துவராக இருந்தவர் லாரி நாஸர் (Larry Nassar). பெண் பிள்ளைகளை கவனித்துக்கொள்ளவேண்டிய நிலையில் இருந்த நாஸர், அந்த வாய்ப்பை தவறாகப் பயன்படுத்திக்கொண்டு, வயது வித்தியாசமில்லாமல் பெண் பிள்ளைகள் மீது பாலியல் தாக்குதல் நடத்திவந்துள்ளார்.
Image: AFP via Getty Images
பாதிக்கப்பட்ட தடகள வீராங்கனைகள் சிலர் நீதிமன்றம் செல்ல, நாஸரில் லீலைகள் வெளியேவந்தது. கைது செய்யப்பட்ட நாஸருக்கு 300 ஆண்டுகளுக்கும் கூடுதலாக சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கத்தியால் சரமாரியாக தாக்கிய நபர்
ப்ளோரிடா சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாஸரை, கடந்த ஞாயிற்றுக்கிழமை, சக கைதி ஒருவர் சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளார்.
Image: AP
கழுத்து, மார்பு மற்றும் முதுகில் குத்தப்பட்ட நாஸரின் நுரையீரல் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு உயிர் காக்கும் சிகிச்சையளிக்கப்பட்டதாகவும், இப்போது அவரது உடல் நிலையில் முன்னேற்றம் காணப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மோசமான புத்தி மாறாத மருத்துவர்
இந்நிலையில், நாஸர் கத்தியால் குத்தப்பட்டது ஏன், அவரைக் குத்தியது யார் என்பது முதலான விவரங்கள் வெளியாகியுள்ளன.
தற்போது விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள் நடந்துவரும் நிலையில், சிறையில் விளையாட்டு போட்டிகளைப் பார்த்துக்கொண்டிருந்த நாஸர் மோசமான விடயம் ஒன்றை பேசியுள்ளார்.
Image: USA Gymnastics / Facebook
சின்ன வயது பெண்களை டென்னிஸ் விளையாடவிட்டால், பார்ப்பதற்கு எவ்வளவு நன்றாக இருக்கும் என்பதுபோல் ஏதோ விமர்சித்துள்ளார் நாஸர்.
பெண் பிள்ளைகள் வாழ்க்கையுடன் விளையாடி, அதற்காக வாழ்நாள் முழுவதும் சிறையில் செலவிடும் நிலை வந்த பின்னரும் கொஞ்சமும் திருந்தாத நாஸரின் மோசமான விமர்சனத்தை கேட்டுக்கொண்டிருந்த Shane McMillan (49) என்னும் சக கைதிக்கு ஆத்திரம் ஏற்பட்டுள்ளது.
Image: AFP/Getty Images
சரியான நேரம் வரக் காத்திருந்த Shane, கைதிகள் சிறை வளாகத்தில் உலாவ அனுமதிக்கப்பட்ட நேரத்தில், கமெரா எதுவும் இல்லாத ஒரு இடத்தில் வைத்து நாஸரை சரமாரியாகக் குத்தியதாக பெயர் வெளியிட விரும்பாத ஒருவர் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |