கைதி மீது கொதிக்கும் தண்ணீரை ஊற்றிய சிறை அதிகாரி.., கருணையே இல்லாமல் நடந்த சம்பவம்
இந்திய மாநிலம் கேரளாவில் உள்ள சிறையில் கைதி மீது கொதிக்கும் தண்ணீரை சிறை அதிகாரி ஊற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உணவில் முடி
இந்திய மாநிலம், கேரளா திருவனந்தபுரத்தில் உள்ள பூஜப்புரா மத்திய சிறையில் ஏராளமான விசாரணை கைதிகள் மற்றும் தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.
இங்கு, கடந்த 4 மாதங்களாக லியோன் ஜான்சன் என்பவர் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், சம்பவம் நடந்த அன்று லியோன் ஜான்சனுக்கு வழங்கப்பட்ட உணவில் முடி கிடந்துள்ளது. இதனால், உணவு வழங்கும் சிறை அதிகாரியிடம் இதுபற்றி கேட்டுள்ளார்.
அதிகாரியின் கொடூர செயல்
அப்போது, கோபமடைந்த சிறை அதிகாரி, கொதிக்கும் தண்ணீரை எடுத்து லியோன் ஜான்சன் மீது ஊற்றியுள்ளார். படுகாயமடைந்து வலியால் துடித்த கைதியை சிறை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து லியோன் ஜான்சனின் நண்பர், கேரள மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் செய்தார். அதன்படி, சிறை அதிகாரி மீது வழக்குப்பதிவு செய்த மனித உரிமைகள் ஆணையம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
மேலும், 15 நாள்களுக்குள் இது பற்றிய அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று புஜப்புரா மத்திய சிறையின் சூப்பிரண்டுக்கு, மாநில மனித உரிமை ஆணைய செயல் தலைவர் பைஜூ நாத் உத்தரவிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |