அவசர சிகிச்சைப்பிரிவில் தீ... மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த எட்டு நோயாளிகள் பலி
இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகரான ஜெய்ப்பூரில் அமைந்துள்ள மருத்துவமனை ஒன்றின் அவசர சிகிச்சைப்பிரிவில் தீப்பற்றியதில் மூன்று பெண்கள் உட்பட எட்டு நோயாளிகள் பரிதாபமாக பலியானார்கள்.
அவசர சிகிச்சைப்பிரிவில் தீ...
ஜெய்ப்பூரில் அமைந்துள்ள Sawai Man Singh (SMS) மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் நேற்றிரவு 11.20 மணியளவில் தீப்பற்றியுள்ளது.
அவசர சிகிச்சைப்பிரிவில் 11 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து நோயாளிகளை வெளியே கொண்டுவர ஒரு மணி நேரம் ஆகியுள்ளது.
Jaipur, Rajasthan: Jaipur, Rajasthan : Six people died after a fire broke out in the ICU ward of Sawai Man Singh (SMS) Hospital. Chief Minister Bhajan Lal Sharma visited the site pic.twitter.com/TKNfIcmJlV
— IANS (@ians_india) October 6, 2025
அதற்குள் 8 நோயாளிகள் உயிரிழந்துவிட்டிருக்கிறார்கள். அவர்களில் மூன்று பேர் பெண்கள்.
மருத்துவமனையில் அவசர சிகிச்சைப்பிரிவில் தீப்பற்றி 8 நோயாளிகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் உருவாக்கியுள்ள நிலையில், எதனால் தீப்பற்றியது என்பதை அறிவதற்காக அதிகாரிகள் விசாரணை ஒன்றைத் துவக்கியுள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |