பாகிஸ்தானை குறிப்பதால் 'மைசூர் பாக்' பெயர் மாற்றம்: இனி இப்படித்தான் அழைக்க வேண்டுமாம்
இந்தியா - பாகிஸ்தான் பதற்றத்தின் இடையே மைசூர் பாக் இனிப்பின் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் பரவுகிறது.
சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தம்
பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டது. இரு நாடுகளும் ஒருவழியாக சண்டையை நிறுத்தின.
எனினும், சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தம் உள்ளிட்ட நடவடிக்கைகளில் இந்தியா ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலையில், ஜெய்ப்பூரை தளமாகக் கொண்ட இனிப்புக்கடை ஒன்று, அதன் பிரபலமான இனிப்புகளின் பெயர்களை மாற்றிவிட்டதாக தெரிவித்துள்ளது வைரலாகியுள்ளது.
"மைசூர் ஸ்ரீ"
அதாவது, பாக் என்று முடியும் இனிப்பு வகைகளில் அதனை நீக்கிவிட்டு "ஸ்ரீ" என மாற்றம் செய்துவிட்டது.
இதனால் மைசூர் பாக், மோத்தி பாக், ஆம் பாக், கோந்த் பாக் போன்ற இனிப்புகளை இனி மைசூர் ஸ்ரீ, மோத்தி ஸ்ரீ, ஆம் ஸ்ரீ, கோந்த் ஸ்ரீ என மாற்றியுள்ளதாக த்யோஹார் இனிப்புக்கடையின் உரிமையாளரான அஞ்சலி ஜெயின் கூறியுள்ளது.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஆதரவு அளிக்கும் விதமாகவும், 'பாக்' என்ற வார்த்தையே தங்களுக்கு அசௌகரியத்தை தருவதாக வாடிக்கையாளர்கள் கூறியதால் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |