சொல்லியடித்த மிட்செல் ஸ்டார்க்! புயல்வேகத்தில் சுக்குநூறான இந்திய அணி (வீடியோ)
அடிலெய்டு டெஸ்டின் முதல் இன்னிங்சில் இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 180 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
ஜெய்ஸ்வால் அவுட்
அவுஸ்திரேலியா மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட், பகல்-இரவு போட்டியாக அடிலெய்டில் நடந்து வருகிறது.
இந்திய அணி முதல் இன்னிங்ஸில் துடுப்பாட்டத்தை தொடங்கியது. அவுஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் (Mitchell Starc) முதல் ஓவரை வீசினார்.
தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் முதல் பந்திலேயே lbw ஆனார். இதன்மூலம் அவர் பிளாட்டினம் டக் ஆகி வெளியேறினார்.
FIRST BALL OF THE TEST!
— cricket.com.au (@cricketcomau) December 6, 2024
Mitchell Starc sends Adelaide into delirium.#AUSvIND | #PlayOfTheDay | @nrmainsurance pic.twitter.com/pIPwqlX3dJ
ரோஹித் ஷர்மா 3
இந்த அதிர்ச்சியில் இருந்து இந்திய அணி மீள முயற்சிக்க கே.எல்.ராகுலை 37 ஓட்டங்களில் ஸ்டார்க் வெளியேற்றினார்.
அடுத்து வந்த விராட் கோஹ்லியும் அவரது ஓவரில் 7 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அணித்தலைவர் ரோஹித் ஷர்மா 3 ஓட்டங்களிலும், ரிஷாப் பண்ட் 21 ஓட்டங்களிலும் அவுட் ஆகினர்.
Mitchell Starc sends Virat Kohli packing!#AUSvIND pic.twitter.com/2AzNllS7xT
— cricket.com.au (@cricketcomau) December 6, 2024
தமிழக வீரர் அஷ்வின் 22 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 22 ஓட்டங்கள் எடுத்து, ஸ்டார்க் ஓவரில் போல்டானார். நிதிஷ் ரெட்டி அணியை மீட்க போராட ஏனைய வீரர் அவுட் ஆனதால் இந்திய அணி 180 ஓட்டங்களுக்கு சுருண்டது.
அதிரடி காட்டிய நிதிஷ் ரெட்டி (Nitish Reddy) 54 பந்துகளில் 3 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 42 ஓட்டங்கள் எடுத்தார். ஸ்டார்க் 48 விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை சாய்த்தார். கம்மின்ஸ் மற்றும் போலண்ட் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.
Just a stunning effort with the pink ball.
— cricket.com.au (@cricketcomau) December 6, 2024
Check out all of Starc's wickets: https://t.co/XYvwRKGke0 https://t.co/b12ZASBsVw
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |