பெயரிலே பிழை.., விஜயின் கட்சி பெயர் குறித்து ஜேம்ஸ் வசந்தன் விளக்கம்
நடிகர் விஜயின் கட்சி பெயரிலே இலக்கண பிழை இருப்பதாக இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் விளக்கமளித்துள்ளார்.
நடிகர் விஜய்
விஜய் தன்னுடைய கட்சிக்கு "தமிழக வெற்றி கழகம்" என்று பெயர் வைத்திருக்கிறார்.
இந்த பெயரை விஜய் அறிவித்ததில் இருந்து விஜயின் மன்ற உறுப்பினர்கள், ரசிகர்கள் என அனைவரும் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.
கட்சியின் பெயரை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்த விஜய் வருகின்ற 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் நேரடியாக போட்டியிடுவோம் என்று கூறியிருக்கிறார்.

விஜயின் புதிய அரசியல் கட்சிக்கு பல்வேறு அரசியல் பிரபலங்களும் சினிமா பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தனர்.
இந்நிலையில், விஜயின் கட்சி பெயரிலே இலக்கண பிழை இருப்பதாக இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கூறி விளக்கமளித்துள்ளார்.
வெளியிட்டுள்ள விளக்கம்
இதுகுறித்து பதிவிட்டுள்ள ஜேம்ஸ் வசந்தன் " 'தமிழக வெற்றி கழகம்' இது அரசியல் பதிவு அல்ல. மொழிப்பதிவு. 'வெற்றி கழகம்' என்பது அல்ல. அல்லது 'வெற்றிக் கழகம்' என்பது சரியா? எனக்கு இலக்கண அறிவு கிடையாது.

ஆகையால், இதில் ஆழ்ந்த அறிவுகொண்டவர் விளக்கலாம். நான் அறிந்தவரை, அது 'வெற்றிக் கழகம்' என்றே இருக்கவேண்டும் என்று தோன்றுகிறது.
'வெற்றிக் கழகம்' என்பது வெற்றியின் கழகம், வெற்றி பெறும் கழகம், வெற்றி அடையும் கழகம் என்கிற பொருளில்தானே இடப்பட்டிருக்கிறது. அப்படியெனில், வலி மிகுந்துதானே ஆகவேண்டும்? தேர்ந்தவர் உறுதிசெய்யலாம்'' என்று பதிவிட்டுள்ளார்.
பெயரிலே பெயிலு pic.twitter.com/433raAXWBV
— Brendon ? (@Esalacupnamdea) February 2, 2024
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |