28வது பிறந்தநாள் கொண்டாடும் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூரின் சொத்து மதிப்பு
இந்தி திரையுலகில் வளர்ந்து வரும் நடிகை ஜான்வி கபூரின் சொத்து மதிப்பு குறித்து இங்கே காண்போம்.
ஜான்வி கபூர்
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் தனது 28வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார்.
2018யில் வெளியான 'தடக்' என்ற இந்தி படத்தின் மூலம் அறிமுகமான ஜான்வி கபூர், அதனைத் தொடர்ந்து பல படங்களில் நடித்தார்.
'தேவாரா' படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் அடியெடுத்து வைத்த இவர், அடுத்ததாக ராம்சரண் நடிக்கும் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்திற்காக ரூ.6 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
ஊதியம்
முன்னதாக அவர் ரூ.5 கோடி வரை ஊதியம் பெற்று வந்தார். ஆனால் அவர் ரூ.10 கோடி வரை ஊதியம் பெறுவார் என்று கூறப்படுகிறது.
ஜான்வி கபூரின் நிகர மதிப்பு சுமார் ரூ.82 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அவரது முதன்மை வருமானம் நடிப்புதான் என்றாலும், பிராண்ட் ஒப்புதல்கள், சமூக ஊடக விளம்பரங்கள் மற்றும் சிறப்பு தோற்றங்கள் வாயிலாகவும் வருமானம் ஈட்டி வருகிறார்.
ஒரு பிராண்ட் ஒப்புதலுக்கு சுமார் 75 லட்சம் முதல் 80 லட்சம் வரை பெறும் ஜான்வி, Renee Cosmetics, Drools, Nykaa, Saffola Fittify, KAZO ஆகிய பிரபல பிராண்டுகளை ஆதரிக்கிறார்.
சொத்துக்கள்
ஜான்வி கபூருக்கு மும்பையில் 3BHK அடுக்குமாடி குடியிருப்பை வைத்துள்ளார். இதன் மதிப்பு தோராயமாக ரூ.39 கோடி ஆகும்.
பாந்த்ராவில் ரூ.65 கோடி மதிப்புள்ள வீட்டை வாங்கியுள்ள இவர், சென்னையிலும் ஒரு ஆடம்பரமான சொத்தையும் வைத்துள்ளார். இது அவரின் தாயார் ஸ்ரீதேவியிடம் இருந்து பெறப்பட்டது.
விலையுயர்ந்த கார்கள் ஜான்வி கபூரின் ஈர்க்கக்கூடிய கார் சேகரிப்பில் Mercedes Maybach S560 என்ற கார் உள்ளது. இதன் மதிப்பு 1.98 கோடி ஆகும்.
மேலும் ரூ.88.28 லட்சம் மதிப்புள்ள Mercedes Benz S-Class, ரூ.82.9 லட்சம் மதிப்புள்ள BMW X5 மற்றும் ரூ.67.15 லட்சம் மதிப்புள்ள கார் ஆகியவற்றையும் வைத்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |