3 லட்சம் பேர் உயிரிழக்க நேரிடும் - முதல் முறையாக மெகா நிலநடுக்க எச்சரிக்கை விடுத்த ஜப்பான்
எச்சரிக்கை அமைப்பு தொடங்கப்பட்டதிலிருந்து முதல் முறையாக ஜப்பான் மெகா நிலநடுக்க எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஜப்பானுக்கு மெகா நிலநடுக்க எச்சரிக்கை
உலகளவில் சுனாமி அல்லது நிலநடுக்கம் போன்ற இயற்கை பேரிடர்களை அதிகளவில் எதிர்கொள்ளும் நாடுகளில் ஒன்றாக ஜப்பான் உள்ளது.
இந்நிலையில் உள்ளூர் நேரப்படிநேற்று இரவு 11;15 மணியளவில், 7.5 ரிக்டர் அளவில் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டது.

இதில், குறைந்தது 30 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சுமார் 2,700 வீடுகள் மின்சாரம் இன்றி தவிப்பதாகவும் கூறப்படுகிறது.
நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. அதன் பின்னர் சுனாமி எச்சரிக்கை திரும்ப பெறப்பட்டது.
இந்நிலையில், 2022 ஆம் ஆண்டு எச்சரிக்கை அமைப்பு தொடங்கப்பட்டதிலிருந்து முதல் முறையாக உயர்மட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஜப்பானின் பூகம்ப ஆராய்ச்சி மேம்பாட்டுத் தலைமையகத்தின்படி, 8.0 ரிக்டருக்கு அதிகமான அளவு கொண்ட மிகவும் சக்திவாய்ந்த மெகா நிலநடுக்கம் ஏற்படும் என எச்சரித்துள்ளது.
3 லட்சம் பேர் உயிரிழக்க நேரிடலாம்
இவ்வாறு மெகா நிலநடுக்கம் மற்றும் பாரிய சுனாமி ஏற்பட்டால், 3 லட்சம் பேர் உயிரிழக்க நேரிடலாம் மேலும், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை பாதியாகக் குறைக்கலாம் என அமைச்சரவை அலுவலகம் கணிப்பை ஒன்றை வெளியிட்டது.

தினசரி நிலநடுக்க முன்னேற்பாடுகளை மீண்டும் சரிபார்த்து கொள்ளுங்கள். அதிர்வுகளை உணர்ந்தவுடன் உடனடியாக வெளியேற தயாராக இருங்கள்” என ஜப்பான் பிரதமர் சானே தகைச்சி தெரிவித்துள்ளார்.
முன்னதாக 2011 ஆம் ஆண்டில் டோஹோகுவில் 7.3 ரிக்டர் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து 2 நாட்களுக்குப் பிறகு 9.0 என்ற மெகா நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் சுமார் 20,000 பேர் உயிரிழந்தனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |