படிக்க சென்ற இடத்தில் உயிரிழந்த இலங்கை பெண் விவகாரம்! மன்னிப்பு கோரிய பிரபல நாடு: இனி இது நடக்காது என உறுதி

Srilanka Death Refugee Jappan
By Kaviarasan Aug 11, 2021 10:00 AM GMT
Report

இலங்கையை சேர்ந்த பெண் ஒருவர் ஜப்பானில் உயிரிழந்த சம்பவம் குறித்து அந்நாட்டு அரசு மன்னிப்பு கோரியுள்ளது.

இலங்கையின் கொழும்புவில் இருக்கும் Kadawatha-வின் Imbulgoda பகுதியைச் சேர்ந்தவர் Wishma Sandamali Ratnayake(33). இவர் கடந்த 2017-ஆம் ஆண்டு மாணவர் விசா மூலம் ஜப்பான் சென்றார்.

ஜப்பானில் இறங்கிய, அவர் அங்கு தன்னுடைய உயர்கல்வியை தொடங்குவதற்கு முன்பு நல்ல ஊதியத்தில் வேலை கிடைக்கும் என்று நம்பியுள்ளார், ஆனால் ஜப்பானில் மிகவும் கொடூரமான முறையில் உயிரிழந்தார்.

படிக்க சென்ற இடத்தில் உயிரிழந்த இலங்கை பெண் விவகாரம்! மன்னிப்பு கோரிய பிரபல நாடு: இனி இது நடக்காது என உறுதி | Japan Apologises Srilankawoman Death

இவரின் மரணம் குடும்பத்தினரை கடும் வேதனைக்குள்ளாக்கியுள்ளது. ஆனால், ஜப்பானில் மாணவர் விசாவில் உள்ளவர்கள், வாரத்திற்கு 28 மணி நேரம் மட்டுமே வேலை செய்ய முடியும்.

அவர்களுக்கு நிரந்தர வேலை கிடைப்பது என்பது மிகவும் கடினம் என்பதை அவர் அங்கு சென்ற பின்னரே உணர்ந்து கொண்டார். இதையடுத்து இவர் அங்கிருக்கும் கல்வி நிறுவனம் ஒன்றில், ஜப்பானிய மொழியை படிக்க துவங்கியுள்ளார்.

ஆனால், அதற்கான கல்விக் கட்டணத்தை அவரால் செலுத்த முடியவில்லை, பல கஷ்டங்களை எதிர் கொண்டார். நினைத்தது போன்று நல்ல வேலை கிடைக்காமலும், கல்விகட்டணத்தையும் செலுத்த முடியாத சூழ்நிலையில் இருந்த போது, இவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இளைஞர் ஒருவரால் துன்புறுத்தப்பட்டதாக பொலிசில் புகார் அளித்துள்ளார்.

ஆனால், பொலிசார் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், Sandamali விசாவுடன் அதிக காலம் இங்கு தங்கிவிட்டதாக கூறி, அவரை கைது செய்து, அங்கிருக்கும் Nagoya தடுப்பு முகாமில் சிறையில் அடைத்தனர்.

இதனால், அவர் இலங்கைக்கு திரும்புவதற்கு பணம் செலுத்த முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளார். அவரை ஒரு குற்றவாளி போல் சிறிய அறையில் அடைத்து, ஏழு மாதங்கள் மிருகத்தை விட மிகவும் மோசமாக நடத்தி வந்துள்ளனர்.

இந்த கடினமான சூழ்நிலையில், தனக்கு குடியேற்ற அதிகாரிகள் தேவையான பாதுகாப்பை வழங்குவார்கள் என்று Sandamali எதிர்பார்த்துள்ளார். ஆனால் அவருக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை.

இதனால் கடந்த டிசம்பரில் கடுமையான நோய்வாய்ப்பட்டு, இரத்த வாந்தி எடுத்தார். இதன் காரணமாக, அவரால் ஜனவரி மாதத்திற்குள் நடக்க கூட முடியாத நிலை ஏற்பட்டது.

சுமார் 20 கிலோ எடையை இழந்த அவரால் நடக்க முடியாததால், ஒரு சக்கர நாற்காலியால் வைத்து அழைத்து செல்லும் அளவிற்கு மிகவும் பலவீனமாக இருந்தார்.

இலங்கைக்கு கூட திரும்ப முடியாத நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அவர் குடும்பத்தினருக்கு கடும் வேதனையை கொடுத்தது. மேலும், அவர்கள் அவர் எப்படி? ஏன் இறந்தார்? என்பதை ஜப்பானிய அரசாங்கம் விளக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தனர்.

படிக்க சென்ற இடத்தில் உயிரிழந்த இலங்கை பெண் விவகாரம்! மன்னிப்பு கோரிய பிரபல நாடு: இனி இது நடக்காது என உறுதி | Japan Apologises Srilankawoman Death

இந்நிலையில், இலங்கை பெண் உயிரிழந்த சம்பவத்தில் மன்ப்பு கோருவதாக நிதி அமைச்சர் Yoko Kamikawa கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த மார்ச் மாதம் 33 வயது மதிக்கத்தக்க இலங்கை பெண் Sandamali-வின் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால், அவருக்கு போதிய சிகிச்சை கொடுக்க முடியவில்லை. குறித்த பெண் இளைஞர் ஒருவரால் துன்புறுத்தலுக்கு இலக்கானதைத் தொடர்ந்து ,அவர் பொலிஸ் பாதுகாப்பை நாடியுள்ளார்.

அப்போது அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் விசா மீறல் இருப்பது தெரியவந்ததால், அவர் கைது செய்யப்பட்டு தடுப்பு முகாமில் வைக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து ஜனவரி மாதம் அவருக்கு கடுமையான வயிற்று வலி மற்றும் பிற அறிகுறிகளால் அவதிப்பட்டதாக புகார் அளித்துள்ளார்.

அப்போது அவருக்கு போதிய மருத்துவ பராமரிப்பு வழங்கப்படவில்லை என்று குற்றம் சாட்டினார். இந்த துயரமான நிலையில் இருக்கும் Sandamali-யின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட பெண் உயிரிழந்ததது, ஒரு விலைமதிப்பதற்றது. இதற்கு என்னுடைய இதயப்பூர்வமான வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

ஆனால், அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், Sandamali-யின் மரணத்திற்கான காரணத்தை உறுதியாக குறிப்பிடவில்லை. அதே சமயம், Yoko Kamikawa, நாகோயாவில் உள்ள தடுப்பு மையத்தில் கைதிகளின் ஆரோக்கியத்தை மதிப்பிடுவதற்கும் மருத்துவ சேவைகளை வழங்குவதற்கும் ஒரு அமைப்பு இல்லை.

குடியேற்ற சேவைகள் நிறுவனத்தின் தலைவரை பிராந்திய விற்பனை நிலையங்களின் கட்டுப்பாட்டை எடுத்து மேற்பார்வை செய்ய நான் அறிவுறுத்தியுள்ளேன். இது மீண்டும் நடக்காது, உறுதியுடன் சீர்திருத்தங்களை மேற்கொள்வோம் என்று குறிப்பிட்டுள்ளார்.       

மரண அறிவித்தல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Bochum, Germany

01 Aug, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, Toronto, Canada

01 Aug, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Luzern, Switzerland

02 Aug, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கனடா, Canada

05 Aug, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொண்டல்கட்டை, Brande, Denmark

17 Jul, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisiel, France

04 Aug, 2023
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, கனடா, Canada

03 Aug, 2015
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, இணுவில் கிழக்கு, கொழும்பு, Scarborough, Canada

30 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
மரண அறிவித்தல்

துன்னாலை கிழக்கு, London, United Kingdom

29 Jul, 2025
மரண அறிவித்தல்

Obersiggenthal, Switzerland, Kirchdorf, Switzerland, Nussbaumen, Switzerland, Mellingen, Switzerland

28 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kedah, Malaysia, சண்டிலிப்பாய், Cheam, United Kingdom

04 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US