தயவு செய்து இந்த முறையில் கொரோனா சோதனை செய்வதை நிறுத்துங்கள்! பிரபல நாட்டுக்கு ஜப்பான் வேண்டுகோள்
ஆசனவாய் வழி கொரோனா சோதனை செய்வதை சீனா நிறுத்த வேண்டும் என ஜப்பான் வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஆசனவாய் வழி கொரோனா சோதனை (Anal Swab Test) செயல்முறை உளவியல் வலியை ஏற்படுத்துகிறது என்று ஜப்பானின் அரசாங்க செய்தித் தொடர்பாளர் Katsunobu Kato தெரிவித்துள்ளார்.
"சில ஜப்பானியர்கள் சீனாவில் உள்ள எங்கள் தூதரகத்திற்கு தங்கள் குத துணியால் பரிசோதனைகள் பெற்றதாக தெரிவித்தனர், இது ஒரு பெரிய உளவியல் வலியை ஏற்படுத்தியது" என்று Kato கூறினார்.
மேலும், இது போன்று எத்தனை ஜப்பானிய குடிமக்கள் இத்தகைய சோதனைகளைப் பெற்றார்கள் என்பது தெரியவில்லை என்றார்.
சீனா ஆசனவாய் வழி முறையைப் பயன்படுத்தி கொரோனா வைரஸ் சோதனைகளை மேற்கொள்வது, மக்களை அவமானப்படுத்தும் மற்றும் அவர்களின் மனித உரிமைகள் மற்றும் கௌரவத்தை மீறும் செயலாகும் என்று பெய்ஜிங்கில் உள்ள பல ஜப்பானிய ஊழியர்கள் விமர்சித்துள்ளனர்.
வேண்டுகோள் விடுத்தும் சீனா சோதனை முறையை மாற்றுவது குறித்து அரசாங்கத்திற்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை. இருப்பினும் சோதனை முறையை மாற்றுமாறு ஜப்பான் தொடர்ந்து சீனாவிடம் கேட்கும் என Kato கூறியுள்ளார்.
முன்னதாக, சில அமெரிக்க அதிகாரிகள் இந்த சோதனை முறைக்கு உட்படுத்தப்பட்டதை அறிந்த அமெரிக்க அரசாங்கம், ஏற்கனவே சீனாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.