தமிழ்நாட்டில் நடந்த நிகழ்வு - தொழிலை விட்டு சிவ பக்தராக மாறிய ஜப்பான் தொழிலதிபர்
தமிழ்நாட்டில் நடந்த நிகழ்வால், ஜப்பானிய தொழிலதிபர் ஒருவர் தனது தொழிலை துறந்து சிவ பக்தராக மாறியுள்ளார்.
தமிழ்நாட்டில் நடந்த நிகழ்வு
41 வயதான ஹோஷி தகாயுகி(Hoshi Takayuki), ஒரு காலத்தில் ஜப்பானில் 15 அழகு சாதனப் பொருட்கள் விற்பனை நிலையங்களை வெற்றிகரமாக நடத்தி வந்தார்.
ஒரு முறை இவர் தமிழகத்திற்கு வந்த போது, பண்டைய பனை ஓலைகளை அடிப்படையாகக் கொண்ட பாரம்பரிய ஜோதிட வாசிப்பு வடிவமான நாடி ஜோதிட அமர்வில் கலந்து கொண்டுள்ளார்.
ஓலை வாசிப்பில், இவர் தனது கடந்த காலத்தில் இமயமலையில் வாழ்ந்ததாகவும், இந்து ஆன்மீகத்தைப் பின்பற்ற விதிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.
இதனையடுத்து, ஜப்பானுக்கு சென்ற அவருக்கு விசித்திரமான கனவு வந்துள்ளது. இதில் அவர் கடந்த காலத்தில் தன்னை உத்தரகண்டில் இருப்பது போல் உணர்ந்துள்ளார். அந்த கனவு அவரது வாழ்க்கையை மாற்றி விட்டது.
இதன் பின்னர், தனது தொழிலை நிர்வாகிகளிடம் ஒப்படைத்து விட்டு, சிவ பக்தராக மாறி விட்டார். டோக்கியோவில் உள்ள தனது வீட்டிலும், வீட்டிற்கு அருகேயும் ஒரு சிவன் கோவிலை கட்டியுள்ளார்.
சாதுவாக மாறிய தொழிலதிபர்
சாதுவைப் போல காவி உடையணிந்துள்ள அவர், தற்போது பால கும்ப குருமுனி என்ற பெயரால் அறியப்படுகிறார்.
தனது 20 சீடர்களுடன் இந்தியா வந்துள்ள அவர், கன்வர் யாத்திரையில் பங்குபெற்று, கங்கை நீரை சுமந்து வெறுங்காலுடன் நடந்து சென்றார். மேலும், கன்வார் யாத்திரையில் பங்குபெறுபவர்களுக்கு, டேராடூனில் 2 நாள் உணவு முகாமையும் நடத்தி வருகிறார்.
அவர், புதுச்சேரியில் ஒரு பெரிய சிவன் கோவிலை ஏற்கனவே 35 ஏக்கர் நிலத்தை வாங்கியுள்ளதாகவும், உத்தரகண்டில் ஒரு ஆசிரமத்தை திறக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவரின் நண்பர் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |