உலகின் நீண்ட கால மரண தண்டனை கைதி நிரபராதி என தீர்ப்பு - ரூ.12 கோடி இழப்பீடு வழங்கும் அரசு
46 ஆண்டுகள் சிறையில் இருந்தவர் நிரபராதி என தீர்ப்பளிக்கப்பட்டதால் அரசு அவருக்கு ரூ.12 கோடி இழப்பீடு வழங்கியுள்ளது.
46 ஆண்டுகள் கழித்து நிரபராதி என தீர்ப்பு
ஜப்பானை சேர்ந்த தொழில் முறை குத்து சண்டை வீரரான இவாவோ ஹகமடாவிற்கு (iwao hakamada) தற்போது வயது 86 ஆகிறது.
இவர் கடந்த 1966 ஆம் ஆண்டு, அதாவது தனது 30 வயதில், தனது முதலாளி, முதலாளியின் மனைவி மற்றும் 2 குழந்தைகளை கொலை செய்து விட்டு கொள்ளையடித்தாக கூறி கைது செய்யப்பட்டார்.
அவரது சட்டக்கறையில் உள்ள ரத்தம் இறந்தவர்களின் டிஎன்ஏ உடன் ஒத்துப்போகவில்லை என்றும், தனது தம்பி குற்றமற்றவர் என்றும் அவரது சகோதரி Hideko (வயது91) சட்டப்போராட்டம் நடத்தி வந்தார்.
ரூ.12 கோடி இழப்பீடு
இதனையடுத்து 2024 ஆம் ஆண்டு மறு விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. விசாரணையில், நீதிமன்றம் இவாவோ ஹகமடா நிரபராதி என கடந்த ஆண்டு தீர்ப்பளித்துள்ளது.
தற்போது, அவர் தனது 91 வயதான அக்காவின் பராமரிப்பில் வாழ்ந்து வருகிறார்.
தவறான குற்றச்சாட்டில் 46 ஆண்டுகளாக சிறையில் இருந்ததற்காக, நாள் ஒன்றுக்கு 12,500 யென்(இந்திய மதிப்பில் ரூ.7,400) என்ற கணக்கில் மொத்தமாக 217 மில்லியன் யென் (இந்திய மதிப்பில் ரூ.12 கோடி) வழங்கியுள்ளது.
2011 ஆம் ஆண்டு அவரின் 75வது பிறந்த நாளின் போது உலகின் நீண்ட கால மரண தண்டனை கைதி என கின்னஸ் அமைப்பு அவருக்கு சான்றளித்தது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |