ஜப்பானை நெருங்கும் அதிதீவிர டுஜூவான் புயல்: வீடுகளை விட்டு வெளியேறும் 1.6 மில்லியன் மக்கள்
ஜப்பான் மிகப்பெரிய புயல் பாதிப்புகளை எதிர்கொள்ள தீவிரமாக தயாராகி வருகிறது.
ஜப்பானை தாக்கும் டுஜூவான் புயல்
ஜப்பானின் தலைநகர் டோக்கியோ மற்றும் கிழக்கு ஜப்பானிய பகுதிகள் தீவிரமான டுஜூவான்(Dujuan) புயல் பாதிப்புகளை எதிர்கொள்ள தயாராகி வருகிறது.
டுஜுவான் புயல் காரணமாக நாட்டின் அப்பகுதிகளுக்கு வெள்ளம் மற்றும் நிலச்சரிவு அபாய எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளது.
ஜப்பான் வானிலை ஆய்வு மையம்(JMA) இசு தீவுகளில் அமைந்துள்ள ஒஷிமா பகுதிகளுக்கு 5ம் நிலை அவசரகால எச்சரிக்கையை பிறப்பித்துள்ளது.
இசு தீவு மற்றும் ஜப்பானின் பசிபிக் கடற்கரை பகுதியில் கொட்டித் தீர்த்த கனமழையால் சில பகுதிகளில் 300 மி.மீ (12 அங்குலம்) அளவுக்கு மேல் மழை பொழிவு பதிவாகியுள்ளது. அதைப்போல ஜப்பானின் பல கிழக்கு மாகாணங்களும் 4ம் நிலை அவசர எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

புயல் ஜப்பானை நெருங்கும் போது மேலும் நிலைமை மோசமடையும் என்ரு வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
தீவிரமான வானிலை எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு வரும் நிலையில், கிட்டத்தட்ட 1.6 மில்லியன் மக்கள் உடனடியாக தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.