பிரதமர் உரையாற்றிய இடத்தில் குண்டு வெடிப்பு: உடனடியாக வெளியேற்றப்பட்ட திக் திக் நொடிகள்., வெளியான வீடியோ
ஜப்பான் பிரதமர் உரையாற்றிய இடத்தில் குண்டு வெடித்ததால், அவர் அங்கிருந்து உடனடியாக வெளியேற்றப்பட்ட நிலையில், சம்பவ இடத்தில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குண்டுவெடிப்பு
ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா (Fumio Kishida) இன்று (சனிக்கிழமை) மேற்கு ஜப்பானில் உள்ள வகயாமாவில் நடந்த பேரணியில் உரையாற்றிக்கொண்டிருந்தார். அப்போது அவருக்கு மிக அருகில் குண்டுவெடிப்புச் சத்தம் கேட்டது.
அந்தப் பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்ததையடுத்து, உடனடியாக பாதுகாப்புப் படையினர் பிரதமரை அங்கிருந்து அவசர அவசரமாக வெளியேற்றினர்.
AP
இப்போது, பிரதமர் பாதுகாப்பாக இருப்பதாகவும், வகயாமா துறைமுகத்தில் சம்பவம் நடந்த இடத்தில் தாக்குதல் நடத்தியவரை பாதுகாப்புப் படையினர் கைது செய்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
Reuters
இந்த சம்பவத்தின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் மக்கள் ஓடுவதைக் காணலாம்.
வீடியோ இதோ..
BREAKING ? Japan’s Prime Minister evacuated after blast at speech in Wakayama, local media reports pic.twitter.com/AHJppKI16m
— Insider Paper (@TheInsiderPaper) April 15, 2023
முன்னாள் பிரதமர்
முன்னதாக ஜூலை 8, 2022 அன்று, முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே பேரணியில் ஒரு உரையின் போது சுட்டுக் கொல்லப்பட்டார். அபே நாரா நகரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின்போது அவர் உரையாற்றினார். 42 வயதுடைய நபர் பின்னால் இருந்து துப்பாக்கிச் சூடு நடத்தியதில், இரண்டு தோட்டாக்கள் தாக்கிய உடனேயே அபே விழுந்தார். அவர் விமானம் மூலம் நாரா மருத்துவ பல்கலைக்கழக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். 6 மணி நேரம் மருத்துவ குழுவினர் அவரை காப்பாற்ற முயன்றனர். சிகிச்சையின்போது அபேவுக்கும் மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் உயிரிழந்தார்.