தலைமைப் பொறுப்பேற்று நடத்த எனக்கு தகுதி உள்ளதா? மக்களைக் கேட்கும் நாடொன்றின் பிரதமர்
ஜப்பான் பிரதமர், நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு முன்கூட்டியே தேர்தல் அறிவிக்க முடிவு செய்துள்ளார்.
ஜப்பான் பிரதமரின் அறிவிப்பு
ஜப்பான் பிரதமரான Sanae Takaichi, இம்மாதம், அதாவது, ஜனவரி மாதம் 23ஆம் திகதி நாடாளுமன்றத்தின் கீழவையைக் கலைக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

கடந்த அக்டோபரில், நாட்டின் முதல் பெண் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட Takaichi, தனது தலைமைத்துவம் குறித்து மக்கள் முடிவு செய்ய ஒரு வாய்ப்பை இந்த தேர்தல் கொடுக்கும் என்று கூறியுள்ளதுடன், நாட்டை தலைமைப் பொறுப்பேற்று நடத்த தான் தகுதியுடையவரா என மக்களைக் கேட்க விரும்புவதாகவும், அதனாலேயே நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு தேர்தல் அறிவித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பிரபலமாக இருக்கும் தனது தற்போதைய சூழலை பயன்படுத்திக் கொள்வதற்காகவும், ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கட்சியில் (LDP) தனது நிலையை வலுப்படுத்துவதற்காகவும், பாராளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மை பெற்றிராத தனது கூட்டணியின் பெரும்பான்மையை உறுதிப்படுத்தவுமே, Takaichi முன்கூட்டியே தேர்தலை நடத்த முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |