ஜப்பான் பிரதமருக்கு கொரோனா தொற்று உறுதி! தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்
ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
கொரோனா தொற்று காரணமாக ஜப்பானை பிரதமர் துனிசியா பயணத்தை தவறவிடுவார் என தகவல்
இருமல் மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கிஷிடாவிற்கு பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்பட்டது. அதன் பின்னர் அவருக்கு லேசான அறிகுறிகளுடன் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து அவர் பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் ஓய்வெடுத்து வருவதாக பிரதமர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
PC: Du Xiaoyi/Pool via Reuters
ஆப்பிரிக்க மேம்பாடு குறித்த முக்கிய மாநாட்டில் கலந்துகொள்ள, துனிசியாவிற்கு செல்ல திட்டமிடப்பட்ட பயணத்தை கொரோனா தொற்று காரணமாக கிஷிடா ரத்து செய்வார் என நெருக்கமான ஒருவர் தெரிவித்தார்.
PC: XINHUA/FILE