அரச குடும்ப அந்தஸ்தை தூக்கி எறிந்து... சாதாரண குடிமகனை மணக்கும் இளவரசி! கணவனுடன் பிரபல நாட்டில் குடியேற திட்டம்
பல வருட சர்ச்சைக்குப் பிறகு, ஜப்பானின் இளவரசி மகோ அரச அந்தஸ்தை விட்டுக்கொடுத்து தனது முன்னாள் வகுப்புத் தோழரை இந்த மாதம் திருமணம் செய்விருப்பதாக அரசு நிறுவனமான Imperial Household ஏஜென்சி தெரிவித்துள்ளது.
எதிர்வரும் அக்டோபர் 26ம் திகதி திருணமத்திற்கு திகதி குறிக்கப்பட்டுள்ளதாக Imperial Household ஏஜென்சி தெரிவித்துள்ளது.
2021ல் டோக்கியோவில் உள்ள சர்வதேச கிறிஸ்டியன் பல்கலைக்கழகத்தில் படிக்கும் போது ஜப்பான் இளவரசியும் Komuro-வும் சந்தித்து பழகியுள்ளனர்.
2017 ஆம் ஆண்டு இருவருக்கும் நிச்சியதார்த்தம் நடந்தது, நிச்சியதார்த்தம் முடிந்ததை பொதுவெளியில் அறிவித்த மகோ-Komuro ஜோடி, அடுத்த வருடம் அதாவது 2018ல் திருமணம் செய்யவுள்ளதாகவும் அறிவித்தனர்.
ஆனால், Komuro-வின் அம்மாவுக்கு இருந்த கடன் பிரச்சனை காரணமாக திருமணம் தள்ளிப்போனது.
திருமணம் தள்ளிப்போவதற்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என இளவரசியின் தந்தை பட்டத்து இளவசரசர் Fumihito விளக்கமளித்தார்.
மேலும், திருமணத்திற்கு முன் பணம் தொடர்பான பிரச்சனைகளை தீர்ப்பது மிக முக்கியமானது என குறிப்பிட்டார்.
இளவரசி மகோ-Komuro திருமணம் தொடர்பான சர்ச்சை பல வருடங்களாக நிலவி வந்த நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தனது அரச அந்தஸ்தை தூக்கி எறிந்து எதிர்வரும் அக்டோபர் 26ம் திகதி இளவரசி மகோ தனது முன்னாள் வகுப்புத் தோழன் Komuro மணக்கவுள்ளார்.
ஜப்பான் சட்டத்தின் படி, சாதாரணமானவரை மணக்க அரச குடும்பத்தைச் சேர்ந்த பெண் உறுப்பினர் தனது அந்தஸ்தை விடுக்ககொடுக்க வேண்டும். ஆனால் இச்சட்டம் ஆண் உறுப்பினர்களுக்கு பொருந்ததாது என்பது குறிப்பிடத்தக்கது.
திருமணம் முடிந்த பிறகு மகோ-Komuro ஜோடி அமெரிக்காவுக்கு குடியேற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. Komuro அமெரிக்காவில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.