மக்களை கொல்லவே வந்தேன்...மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட ஜப்பான் குற்றவாளி!
ஜப்பானில் கடந்த 2008ம் ஆண்டு 7 பேரை கத்தியால் குத்திக் கொன்ற நபருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
கடந்த 2008ம் ஆண்டு தலைநகரின் அகிஹபரா மாவட்டத்தின் பிரதான சாலையில் பாதசாரி குழுக்கள் மீது வாடகைக்கு எடுக்கப்பட்ட டிரக்கை மோதி விபத்து ஏற்படுத்தியதுடன், 7 பேரை டோமோஹிரோ கட்டோ கத்தியால் குத்துக் கொலை செய்தார்.
இந்த கொடூர சம்பவத்தை தொடர்ந்து, கட்டோவை கைது செய்த பொலிஸார் அவரை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து, அவரது குற்றத்திற்காக கட்டோவுக்கு மரண தண்டனை பெற்று தந்தது.
மேலும் கட்டோவின் மரண தண்டனையை ஜப்பான் உச்ச நீதிமன்றமும் கடந்த பிப்ரவரி 2015இல் இறுதி செய்தது. அத்துடன் கீழ் நீதிமன்றத்தின் தண்டனையை எதிர்த்து கட்டோவின் மேல்முறையீட்டு வழக்கை நிராகரித்த உச்ச நீதிமன்றம், கட்டோவின் மேல்முறையீட்டிற்கு சாதகமான எந்தவொரு மென்மையான காரணமும் தெரியவில்லை எனத் தெரிவித்ததுள்ளது.
இந்தநிலையில், 7 பேரை கொன்ற கட்டோவிற்கு தற்போது மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
2008ம் ஆண்டு நடைபெற்ற இந்த பயங்கர சம்பவத்தை தொடர்ந்து கட்டோவை கைது செய்த பொலிஸாரிடம் அவர் தெரிவித்த தகவலில், தான் வாழ்க்கையில் மிகவும் சோர்வாக இருப்பதாகவும், அகிஹபராவில் மக்களை கொல்வதற்காக சென்றதாகவும், தான் யாரை பற்றியும் கவலைப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தின் போது 7 பேர் கொல்லப்பட்டத்துடன் குறைந்தது 10 பேர் வரை காயமடைந்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
கூடுதல் செய்திகளுக்கு: உக்ரைனுக்கு நிதியை வாரி வழங்கும் முதலீட்டு வங்கி: ஐரோப்பிய ஒன்றியம் அதிரடி!
கடோவின் இந்த பயங்கர சம்பவத்திற்கு பிறகு ஜப்பானில் கத்தி உரிமை தொடர்பான சட்டங்கள் கடுமையாக்கப்பட்டுள்ளன.