ஜப்பானின் முதல் பெண் பிரதமரானார் சனே தகைச்சி!
ஜப்பானின் முதல் பெண் பிரதமராக சனே தகைச்சி(Sanae Takaichi) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஜப்பானின் முதல் பெண் பிரதமர்
ஜப்பானின் முதல் பெண் பிரதமராக சனே தகைச்சி(Sanae Takaichi) தேர்வு செய்யப்பட்டு அந்நாட்டின் அரசியல் வரலாற்றில் நீங்காத இடம் பிடித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் கீழ்சபையில் மொத்தமுள்ள 465 இடங்களுக்கான வாக்குகளில் சனே தகைச்சி 237 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
சனே தகைச்சி மதியம் பதவியேற்க உள்ள நிலையில் நாடாளுமன்றத்தின் மேலவையிலும் தன்னுடைய பெரும்பான்மையை நிரூபிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சனே தகைச்சி-யின் இந்த வெற்றி ஜப்பான் அரசியலில் நடந்த சமீபத்திய மாற்றத்தால் ஏற்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் சனே தங்கைச்சியின் தாராளவாத ஜனநாயகக் கட்சி(LDP), ஜப்பான் இனோவேஷன் கட்சியுடன் கூட்டணி(JIP) ஒப்பந்தம் செய்து கொண்டதை அடுத்து இந்த வெற்றி கிடைத்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |