தன்னைத் தானே திருமணம் செய்து கொள்ளும் அழகிகள்! கவலையை ஏற்படுத்தியுள்ள செய்தி
ஜப்பானில், தன்னைத்தான் திருமணம் செய்துகொள்ளும் இளம்பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது.
கவலையை ஏற்படுத்தியுள்ள விடயம்
சில நாடுகள் மக்கள்தொகை அதிகரித்துவருவதால் கவலையடைந்துவரும் அதே நேரத்தில், சில நாடுகள் குறைந்துவரும் மக்கள்தொகை குறித்து கவலையடைந்து வருவதையும் மறுப்பதற்கில்லை.
ஏற்கனவே பல்வேறு காரணங்களால் குழந்தை பிறப்பு குறைந்துவரும் நிலை சில நாடுகளில் காணப்படுகிறது. இந்நிலையில், ஜப்பானில் தன்னைத்தான் திருமணம் செய்துவரும் இளம்பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறதாம்.
ஒரு மாதத்தில் குறைந்தபட்சம் 10 பெண்கள் தன்னைத்தான் திருமணம் செய்துகொள்வதாக அழகு நிலையம் நடத்தும் ஒருவர் தெரிவிக்கிறார்.
என்ன காரணம்?
எதற்காக இந்தப் பெண்கள் தன்னைத்தான் திருமணம் செய்துகொள்ளவிரும்புகிறார்கள் என்று கேட்டால், அவர்கள் கூறும் பதில் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
இளம் வயதிலேயே தங்கள் எதிர்காலத்தைக் குறித்து பயப்படுகிறார்கள் இந்த இளம்பெண்கள். முதிர்வயதில் செலவு செய்ய பணத்துக்கு என்ன செய்வோம் என்பது அவர்களுடைய முக்கிய கவலைகளில் ஒன்று.
இளமை இருக்கும்போது உழைத்து பணம் சேர்த்துவைத்துவிட்டு, அந்த பணத்தைக் கொண்டு முதுமையை செலவிடவேண்டும் என்கிறார்கள் அந்தப் பெண்கள்.
அப்படியே திருமணம் செய்தாலும், நிரந்தர வேலையிலிருக்கும் ஒருவரையே திருமணம் செய்ய அவர்கள் விரும்புகிறார்கள்.
அழகிய இளம்பெண் ஒருவரிடம், மிகக் கவர்ச்சியான, மிக நல்ல தோற்றம் கொண்ட, வேடிக்கையான ஒருவரை நீங்கள் சந்திக்கிறீர்கள்.
ஆனால், அவர் தற்காலிக வேலையிலிருக்கிறார் என்றால் அவரைத் திருமணம் செய்துகொள்வீர்களா என்று கேட்டால், அவரிடம் நிரந்தர வேலை ஒன்றைத் தேடிக்கொள்ளச் சொல்வேன் என்கிறார் அந்தப் பெண்.
ஆக, அன்பு, காதல், குடும்பம், குழந்தைகள் என இயற்கை உருவாக்கியுள்ள, இயற்கைக்கு அடிப்படையான எல்லா விடயங்களையும் விட, எதிர்காலத்துக்கு பணம் வேண்டும் என்னும் ஒரு மன நிலை இளம்பெண்களுக்கு உருவாகியுள்ளது கவலையை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.
அப்படியானால், எதிர்கால சந்ததி என்னவாகும், பணத்தை மட்டும் வைத்துக்கொண்டு அன்பைப் பகிர்ந்துகொள்ள உறவுகளே இல்லாத வாழ்க்கை என்ன வாழ்க்கை?
ஆக, இந்த இளம்பெண்கள், இன்ஸ்டாகிராமில் பதிவிடுவதற்காக, திருமண உடை அணிந்து புகைப்படங்கள் எடுத்து வைத்துக்கொள்கிறார்கள்.
பெரும் செலவில் திருமண உடையும் புகைப்படங்களும் ஏற்பாடு செய்து, ஆனால், மணமகன் இல்லாத இவ்வகைத் திருமணங்களால் உலகத்துக்கு என்ன நன்மை?
உண்மை புரியவரும்போது, இளமையே முடிந்துபோயிருந்தால் இந்த பெண்கள் என்ன செய்வார்கள்?